ITR: புதிய வரி விதிப்பு முறையில் இருந்து பழைய வரி விதிப்பு முறைக்கு மாற வேண்டுமா..!!

Old Tax Regime vs New Tax Regime: 2023ல் புதிய வரி விதிப்பு முறைல் நீங்கள் தவறுதலாக ஐடிஆர் தாக்கல் செய்து, வரி விலக்கு போன்றவற்றைப் பெற முடியாத நிலையில், இந்த ஆண்டு பழைய வரி முறைக்கு மாற முடியுமா என்ற கேள்வி எல்லோரும் மனதிலும் எழும். அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 5, 2024, 10:35 AM IST
  • வருமான வரி முறை தொடர்பான தேர்வு உங்கள் வருமானம் மற்றும் உங்களது சூழ்நிலை அடிப்படையில் சார்ந்து இருக்கலாம்.
  • பழைய வரி முறை மற்றும் புதிய வரி முறை தொடர்பாக பல கேள்விகள் பலர் மனதில் எழலாம்.
  • வரி விதிப்பு முறை தொடர்பாக வருமான விதிகள் கூறுவது என்ன?
ITR: புதிய வரி விதிப்பு முறையில் இருந்து பழைய வரி விதிப்பு முறைக்கு மாற வேண்டுமா..!! title=

வரி திட்டமிடலுக்கான காலம் தொடங்கியுள்ளது. வரிச் சேமிப்புக்கான முதலீட்டுச் சான்றுகளை அலுவலகத்தில், பணி செய்யும் இடத்தில் சம்பர்பிக்கும் நேரமும் வந்து விட்டது. வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்யும் போது, நீங்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை I-T துறை இணையதளம் எடுத்துரைக்கும். ஆனால் நீங்கள் இணையதளம் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் போது அல்லது நீங்கள் ITR ஐ ஆஃப்லைனில் தாக்கல் செய்யும் போது, உங்களிடம் கேட்கும் முதல் விருப்பம்,  பழைய வரி முறை அல்லது புதிய வரி முறை இரண்டில் எதன் கீழ் வருமான வரியை தாக்கல் செய்ய விரும்புகிறீர்கள் என்பது தான்.

பழைய வரி விதிப்பு முறை என்பது வரி சேமிப்பு முதலீடுகள் உள்ளவர்களுக்கும், 10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், புதிய வரி விதிப்பு ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் குறைவானவர்களுக்கும், முதலீடுகள் இல்லாதவர்களுக்கும் சிறந்தது என்று கூறப்படுகிறது.

வருமான வரி முறை தொடர்பான தேர்வு உங்கள் வருமானம் மற்றும் உங்களது சூழ்நிலை அடிப்படையில் சார்ந்து இருக்கலாம் என்றாலும், ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இரண்டு விருப்பங்களையும் கவனமாக மதிப்பீடு செய்வது நல்லது.

பழைய வரி முறை  மற்றும் புதிய வரி முறை தொடர்பாக கீழ்க்ண்ட கேள்விகள் பலர் மனதில் எழலாம்: 

1. புதிய வரி விதிப்பில் நீங்கள் வருமான வரியை (Income Tax) தாக்கல் செய்திருந்தால் உண்டாகும் தாக்கங்கள் அல்லது பலன்கள் என்ன?

2. 2023 இல் நீங்கள் தவறுதலாக ITR ஐ புதிய வரி விதிப்பு முறையில் தாக்கல் செய்திருந்தால் மற்றும் வரி விலக்கு போன்றவற்றைப் பெற முடியவில்லை என்றால், இந்த ஆண்டு பழைய வரி முறைக்கு மாற முடியுமா?

3. அல்லது, புதிய வரி விதிப்பு உங்கள் இயல்புநிலை வரி அமைப்பாக மாறுமா?

மேலும் படிக்க | போஸ்ட் ஆபிஸ் FD VS RD - மக்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுப்பது எது...?

வரி விதிப்பு முறை தொடர்பாக வருமான விதிகள் கூறுகின்றன மற்றும் உங்களிடம் உள்ள விருப்பங்களை அறிந்து கொள்ளலாம்:

FY 2023 - 24 நிதி ஆண்டிற்கு புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்த பிறகும், வரி விலக்கு பெற உங்களுக்கு ஆப்ஷன் உள்ளது. இதற்கு நீங்கள் வரி முறையை மாற்ற வேண்டும்.

பழைய வரி முறை மற்றும் புதிய வரி முறை: நீங்கள் வரி முறையை மாற்ற முடியுமா?

ஆம், நீங்கள் சம்பளம் பெறும் நபராக இருந்தால், நீங்கள் வரி முறையை மாற்றலாம். இந்த முறை, வரி விதிப்பு முறை, இயல்புநிலை தேர்வாக மாற்றப்பட்டது, இதன் காரணமாக வரி செலுத்துவோர் தங்கள் வரி முறையைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமடைந்தனர். மேலும் புதிய வரி விதிப்பு முறையை கொண்டு வந்த பிறகு மீண்டும் மீண்டும் வரி விதிப்பு முறையை மாற்ற முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்ட அறிக்கை

இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கடந்த ஏப்ரல் 13, 2020 அன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, அதில் 'வணிக வருமானம்' உள்ளவர்கள் அதாவது வணிகத்திலிருந்து வருமானம் பெறும் வரி செலுத்துவோர் இந்த ஒரே ஒரு முறை மட்டுமே, இந்த வாய்ப்பை பெறுவார்கள் என்று கூறப்பட்டது.

அதனால் அவர்கள் வரி விதிப்பை மாற்ற முடியும். எனவே இதன் அர்த்தம் என்ன?

இதன் பொருள் வணிகத்தின் மூலம் வருமானம் ஈட்டாத, பிற நபர்கள் வரி முறையை மாற்றுவதற்கான விருப்பம் தொடர்ந்து உள்ளது.

அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வரி விதிப்பு முறையை மாற்றலாம்.

பழைய மற்றும் புதிய வரி முறை: விதிகள் என்ன?

புதிய வரி விதிப்பு முறையின் மூலம், வணிக வருமானம் உள்ளவர்கள் ஒரு முறை மட்டுமே வரி விதிப்பை மாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்ற விதி உள்ளது.

ஒவ்வொரு புதிய நிதியாண்டிலும் வரி விதிப்பை அவர்களால் மாற்ற முடியாது.

ஆனால் அதற்கு மாறாக, சம்பளம் பெறும் நபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் தங்கள் வரி விதிப்பை மாற்றுவதற்கான விருப்பம் உள்ளது.

அதாவது, நீங்கள் சம்பளம் பெறும் நபர் அல்லது ஓய்வூதியம் பெறுபவராக இருந்து, கடந்த ஆண்டு புதிய வரி முறையில் வரி செலுத்தியிருந்தால், இந்த ஆண்டு உங்கள் வசதிக்கேற்ப பழைய வரி முறையைத் தேர்வு செய்யலாம்.

அதன் பிறகு, நீங்கள் விரும்பினால், அடுத்த ஆண்டு புதிய வரி முறையைத் தேர்வுசெய்ய உங்களுக்கு விருப்பம் இருக்கும்.

அதாவது ஒவ்வொரு வருடமும் உங்கள் வரி விதியை (புதிய வரி முறை Vs பழைய வரி முறை) மாற்றலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த ஆண்டு எந்த வகையில் கீழ் நீங்கள் வரி தாக்கல் செய்வீர்கள் என்பதை முதலில் உங்கள் நிறுவனத்திற்குச் சொல்ல வேண்டும்.

மேலும் படிக்க | மத்திய பட்ஜெட் 2024... பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News