வேலை இல்லையா கவலை வேண்டாம்... குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கி லாபம் அள்ளலாம்..!!

தொழிலைத் தொடங்க பலருக்கு ஆர்வம் இருக்கும். ஆனால் பணம் இல்லாததால், பலரால் தொழில் தொடங்க முடியவதில்லை. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2020, 04:06 PM IST
  • தொழிலைத் தொடங்க பலருக்கு ஆர்வம் இருக்கும். ஆனால் பணம் இல்லாததால், பலரால் தொழில் தொடங்க முடியவதில்லை.
  • கொரோனா காரணமாக பலர் வேலை இழந்து விட்டனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
  • ஆயுர்வேத காப்ஸ்யூல் தயாரிக்கும் தொழிலுக்கும் முத்ரா கடன் கிடைக்கிறது.
வேலை இல்லையா கவலை வேண்டாம்... குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கி லாபம் அள்ளலாம்..!! title=

கொரோனா (corona)  காரணமாக பலர் வேலை இழந்து விட்டனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 

தற்போது வேலை வாய்ப்புகளும் பெரிதாக இல்லை. ஆனால், கவலையை விடுங்கள். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கி, பெரிய அளவில் இலாபம் ஈட்டித் தரும் பல தொழில்கள் உள்ளன.

முதலீட்டிற்கு ₹1-2 லட்சம்  வரை இருந்தால் போது. மீதி பணத்தை முத்ரா திட்டத்தின் மூலம் பெற்று தொழில் தொடங்கலாம். குறைந்த முதலீட்டில் லாபம் அள்ளித்தரும் 5 வகை தொழில்களை பார்க்கலாம்.

மோடி அரசால் முத்ரா திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்படும் வணிகங்கள் இவை.மேலும், உங்கள் செலவு அதிகரித்தால், அதற்காக தேவைப்படும் மீதமுள்ள மூலதனத்தையும் முத்ரா திட்டத்தின் கீழ் பெறும் வசதி உள்ளது. அதற்கான வழிமுறைகள் என்ன என பார்க்கலாம்.

இப்போது அதிக இலாபம் கொடுக்கும் தொழிலை பற்றி பார்க்கும் போது, ஒரு தக்காளி சாஸ் உற்பத்தி பிரிவை  தொடக்க சுமார் 1 லட்சம் 95 ஆயிரம் ரூபாய்  இருந்தால் போதும். நீங்கள் 1.50 லட்சம் குறிப்பிட்ட காலத்திற்கான கடனையும், சுமார் 4.36 லட்சம் ரூபாய் மூலதனக் கடனையும் முத்ரா திட்டத்தின் கீழ் பெறலாம். நீங்கள் ஒரு வருடத்தில் சுமார் 30 ஆயிரம் கிலோ தக்காளி சாஸை தயார் செய்யலாம் மற்றும் ஆண்டு உற்பத்தி செலவாக நீங்கள் சுமார் 24 லட்சம் 37 ஆயிரம் ரூபாய் செலவிடுவீர்கள். அதே நேரத்தில், நீங்கள் ஒரு கிலோவிற்கு 95 ரூபாய் என்ற விகிதத்தில் 30 ஆயிரம் கிலோ சாஸை சந்தையில் விற்றால், உங்கள் வருடாந்திர வருவாய் 28 லட்சம் 50 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.

மேலும் படிக்க | மறவாதீர்கள்.. ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி நாள் செப்.30..!!!

ஆயுர்வேத காப்ஸ்யூல் தயாரிக்கும் தொழிலுக்கும் முத்ரா கடன் கிடைக்கிறது. ஆயுர் வேத காப்ஸ்யூல்   யூனிட்டைத் தொடங்க விரும்பினால், இந்த யூனிட்டை சுமார் 1.10 லட்சம் ரூபாய்க்கு தொடங்கலாம். இந்த திட்டத்தின் மொத்த செலவு 4 லட்சம் 47 ஆயிரம் ரூபாய். இந்த செலவில், நீங்கள் 20 லட்சம் காப்ஸ்யூல்களை தயாரிக்கலாம். திட்ட செலவில்  வாடகை, உபகரணங்கள் மற்றும் ஊழியர்களுக்கான  மாத ஊதியம் ஆகியவை அடங்கும். இந்த திட்ட அறிக்கையின் அடிப்படையில், பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். திட்டம் தொடங்கியதும் ஏற்படும் உற்பத்தி செலவு சுமார் 11 லட்சம் 72 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்கும். அதே நேரத்தில், சுமார் 3 லட்சம் 28 ஆயிரம் ரூபாய் நேரடி லாபம் இருக்கும்.

நீங்கள் ஒரு அரிசி பதப்படுத்தும் ஆலையைத் தொடங்கினால், மொத்தம் 3.5 லட்சம் ரூபாய் திட்ட செலவில் ஒரு யூனிட்டை தொடக்கலாம். இதில், சுமார் 25 சதவீத பணத்தை ஏற்பாடு செய்தால் போது. உங்களுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் கிடைக்கும். திட்டத்தின் கீழ், நீங்கள் சுமார் 370 குவிண்டால் அரிசியை பதப்படுத்தலாம். அதன் உற்பத்தி செலவு சுமார் 4 லட்சம் 45 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்கும், இதன் மூலம் சுமார் 1 லட்சம் 10 ஆயிரம் ரூபாய் நிகர லாபம் கிடைக்கும்.

காதி கிராம தொழில் வாரியத்தின் அறிக்கையின்படி, ஆயுர்வேத பொடிகள் தயாரிக்க ஒரு யூனிட்டை ரூ .4.76 லட்சம் திட்ட செலவில் தொடங்கலாம். இதில், நீங்கள் சுமார் 1.25 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்தால் போதும். மீதமுள்ள தொகையை முத்ரா திட்டத்தின் மூலம் கடனாக பெறலாம்.  நீங்கள் சுமார் 65 ஆயிரம் கார்டன் அலவிற்கு ஆயுர்வேத பொடிகள் மற்றும் சூரணம் உற்பத்தி செய்யலாம், இதன் உற்பத்தி செலவு 13 லட்சம் 41 ஆயிரம் ரூபாய்க்கு வரும். உங்கள் மொத்த விற்பனை 16 லட்சம் ரூபாயாக இருக்கும்.  அதாவது உங்களுக்கு 2 லட்சத்தி 58 ஆயிரம் ரூபாய் இலாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க | சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட் இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது..!!

நீங்கள் மசாலா தூள் தயாரிக்கும் யூனிட் ஒன்றை நிறுவ விரும்பினால், சுமார் 6.55 லட்சம் ரூபாய் திட்ட செலவில் தொடங்கலாம். இதற்காக, நீங்கள் சுமார் 1.66 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். உங்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ .3.32 லட்சம் குறிப்பிட்ட காலத்திற்கான கடனும் ரூ .1.66 லட்சம் மூலதன கடனும் கிடைக்கும். முத்ரா திட்டத்தின் கீழ் எந்த வங்கியிலிருந்தும் இந்த கடனைப் பெறலாம்.  இந்த திட்டத்தில் சுமார் 1.45 லட்சம் ரூபாய் நிகர லாபத்தைப் பெறலாம்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News