Pradhan Mantri Awas Yojana: பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 3 கோடி வீடுகள் கட்ட முடிவெடுக்கப்பட்டு, அதற்கான நிதியுதவி அளிப்பதற்கு பிரதமர் மோடி தலைமையில் ஜூன் 10 அன்று நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆவாஸ் யோஜனா திட்டம் பாஜக தலைமையிலான அரசால் 25 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டது. இந்த பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் முதன்மை நோக்கம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் சொந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்ட உதவுவதாகும். இந்த PMAY திட்டத்தின் மூலம், கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 4.21 கோடி வீடுகள் ஏழைக் குடும்பங்களுக்கு கட்டப்பட்டுள்ளன.
தகுதியுள்ள பொதுமக்கள் அனைவரும் PMAY திட்டத்தில் வீடு கட்டித்தர விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு முன்பு, பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் நன்மைகள், பலன்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். PMAY திட்டத்தில் இரண்டு வகையான வீடுகள் கட்டித்தரப்படுகிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் (PMAY-G) மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புற (PMAY-U) ஆகியவை ஆகும். கிராம மற்றும் நகர்ப்புறங்களில் தற்காலிக வீடுகளில் வசிக்கும் மக்கள், தங்களிடம் சொந்த நிலம் இருக்கும் பட்சத்தில் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
அரசு மானியம்
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான வீட்டுக் கடனுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தின் தொகையானது வீட்டின் அளவு மற்றும் உங்களின் குடும்ப வருமான அளவைப் பொறுத்தது ஆகும். இத்திட்டத்தின் கீழ் வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. இந்த PMAY திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன்களுக்கான அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 20 ஆண்டுகள் ஆகும்.
என்ன தகுதி வேண்டும்?
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பலன்களை பெற விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாகவும், 18 வயதை அடைந்து இருக்க வேண்டும். மேலும் ஆண்டு வருமானம் ரூ. 18 லட்சம் வரை இருக்கும் குடும்பங்களுக்கும் கிடைக்கிறது. மற்றொரு முக்கியமான தகுதி என்னவென்றால் விண்ணப்பதாரர் பெயரில் இதற்கு முன்பு எந்த ஒரு வீடும் இருக்க கூடாது. அதே போல அவரது குடும்பத்தில் இருக்கும் யாரும் அரசு பணியில் இருக்கக்கூடாது. மேலும் பயனாளியின் அடையாள அட்டை, முகவரி சான்று, வருமான சான்று, வங்கி பாஸ் புக் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா இணைய பக்கத்திற்கு சென்று (https://pmaymis.gov.in) டேட்டா என்ட்ரியை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு பயனாளிகளுக்கு என்பதை கிளிக் செய்யவும். பின்னர் அதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் வங்கி கணக்குகளை சரியாக நிரப்ப வேண்டும். அதில் இல்ல அனைத்து விவரங்களையும் ஒன்னு விடாமல் பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு rhreporting.nic.in இணைய பக்கத்தில் சென்று சரி பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 3 அதிகரிப்பு! மாநில அரசு நடவடிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ