EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிர்வகிக்கப்படும் ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்த்தில் சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை அவர்களது இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். ஊழியர் டெபாசிட் செய்யும் அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்யும். இருப்பினும், ஒரு நிறுவனம் மூடப்பட்டால் அல்லது ஒரு ஊழியர் நீண்ட நாட்களுக்கு வேலை இல்லாமல் இருந்து அவரது கணக்கில் பணம் டெபசிட் செய்யப்படாமல் இருந்தால், அவரது பிஎஃப் கணக்கு செயலிழந்துவிடும். ஆங்கிலத்தில் இதை Inoperative PF Account என்று சொல்வார்கள்.
ஒரு பணியில் இருந்து மற்றொரு பணிக்கு மாறும்போது ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கையும் மாற்ற வேண்டியது மிக அவசியமாகும். ஆனால் நிறுவனம் மூடப்பட்டால் பிஎஃப் கணக்கும் மூடப்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அந்த நிறுவனத்தின் செயலற்ற பிஎஃப் கணக்கிலிருந்து மக்கள் பணத்தை எடுக்கலாம். மூடப்பட்ட அல்லது உரிமை கோரப்படாத பிஎஃப் கணக்குகளில் இருந்து பணம் எடுக்க இபிஎஃப்ஓ அதற்கான பிரத்யேக செயல்முறைகளை வைத்துள்ளது.
செயலற்ற இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது எப்படி?
ஒரு ஊழியர் தனது கணக்கில் உரிமை கோரப்படாத பிஎஃப் இருப்பை வைத்திருந்தால், அந்த நிதியை எடுக்கவோ அல்லது தற்போதைய நிறுவனத்திற்கு மாற்றவோ அவருக்கு வசதி உள்ளது. ஐந்து ஆண்டுகள் முடிவதற்குள் பிஎஃப் கணக்கிலிருந்து எடுக்கப்படும் முழுத் தொகைக்கும் வரி விதிக்கப்படும். செயலற்ற இபிஎஃப் கணக்கைக் (Dormant EPF Account) கையாள்வது சிக்கலானதாக இருக்கலாம். செயலற்ற கணக்கு உங்கள் பணத்தை சிக்க வைப்பது மட்டுமல்லாமல், அந்த பணத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் நீக்குகிறது. தற்போதைய நிலவரப்படி, இபிஎஃப் கணக்குகளில் சுமார் 26,497 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் உள்ளதாக இபிஎஃப்ஓ கூறியுள்ளது.
இபிஎஃப் உறுப்பினரின் திடீர் மரணம் ஏற்பட்டால், நாமினியின் பெயர் இல்லாமலும் க்ளைம் செய்யலாம், எப்படி என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்லைனில் இபிஎஃப் கணக்கிலிருந்து கோரப்படாத தொகையை எடுப்பதற்கான செயல்முறை
- ஆன்லைனில் இபிஎஃப் தொகையை திரும்பப் பெறுவதற்கு, உங்கள் UAN செயலில் உள்ளதா மற்றும் உங்கள் KYC (ஆதார், பான் மற்றும் வங்கி விவரங்கள்) உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை முதலில் உறுதிசெய்ய வேண்டும். இந்தத் தேவையை நீங்கள் பூர்த்தி செய்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி ஆன்லைனில் உங்கள் இபிஎஃப் தொகையை திரும்பப் பெறலாம்.
- www.epfindia.com என்ற இணையதளத்தில் உள்நுழையவும்.
- ‘For Employees’ பகுதியைத் தேர்ந்தெடுத்து, அதன் கீழ் உள்ள‘Inoperative A/C Helpdesk’ என்பதைக் கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க | NPCI பிறப்பித்த உத்தரவு... ‘இந்த’ UPI கணக்குகள் முடக்கப்படும்!
- இதற்குப் பிறகு, நீங்கள் ஹெல்ப் டெஸ்க் பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.
- இந்தப் பக்கத்தில் '(a) First Time User Click Here to Proceed' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் கணக்கு ஏன் செயலிழக்கப்பட்டது என்பதை‘Problem Description’ பிரிவில் விளக்கவும்.
- இது முடிந்த பிறகு அடுத்த பக்கத்தில் நீங்கள் EPF எண், நிறுவனத்தின் பெயர் மற்றும் பிற தகவல்களையும் உங்களுடன் தொடர்புடைய அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும். இது முடிந்ததும் ‘Next’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- அடுத்த பக்கத்தில் ஆதார் எண், பான் எண், வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு போன்ற அனைத்து KYC விவரங்களையும் உள்ளிட வேண்டும்.
- பின்னர் 'Generate PIN' என்பதைக் கிளிக் செய்யவும். இது 'பின் வெற்றிகரமாக உங்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்டது' என்று ஒரு அறிவிப்பை உருவாக்கும்.
- PIN உள்ளிட்டு, பின்னைச் சரிபார்த்த பிறகு ‘Send’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் குறிப்பு ஐடி அடங்கிய SMS ஒன்றைப் பெறுவீர்கள். உங்கள் திரையில்‘Acknowledgement’ -ஐயும் பெறுவீர்கள்.
- பின்னர் நீங்கள் ஹெல்ப் டெஸ்கில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினராக உள்நுழைந்து, உங்கள் விண்ணப்ப நிலையைச் சரிபார்க்க உங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடலாம்.
- கோரிக்கையானது கள அதிகாரிக்கு மாற்றப்படும், பின்னர் அவர் உங்களை நேரில் தொடர்பு கொண்டு அடுத்த நடவடிக்கைகளை எடுப்பதில் உங்களுக்கு உதவுவார்.
உரிமை கோரப்படாத இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது எப்படி
உங்கள் உரிமை கோரப்படாத இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது மிகவும் எளிதானது. நீங்கள் கணக்கைக் கண்டறிந்து, அடுத்த படிகளைப் பின்பற்ற வேண்டும்.
- இபிஎஃப்ஓ இணையதளத்தில் உள்நுழைந்து இபிஎஃப் உரிமைகோரல் படிவத்தை நிரப்பவும்.
- இந்தப் படிவத்தை உங்கள் அருகிலுள்ள இபிஎஃப்ஓ அலுவலகத்தில் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கவும்.
- அதன் பிறகு 3-20 நாட்களுக்குள் தொகையைப் பெறுவீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ