உங்கள் பிஎஃப் கணக்கில் நிறுவனம் பணத்தை டெபாசிட் செய்ததா? நிமிடங்களில் இப்படி செக் செய்யலாம்

EPFO Update: பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் EPF இருப்பை ஆஃப்லைனிலோ அல்லது ஆன்லைனிலோ சரிபார்க்கலாம். தங்கள் இபிஎஃப் இருப்பைச் சரிபார்க்க பணியாளர்கள் இப்போது SMS, மிஸ்ட் கால், இபிஎஃப்ஓ செயலி / உமங் செயலி அல்லது EPFO போர்ட்டலைப் பயன்படுத்தலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 6, 2023, 08:46 AM IST
  • அனைத்து இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கும் ஆன்லைன் இபிஎஃப் உறுப்பினர் பாஸ்புக் வழங்கப்படும்.
  • இந்த பாஸ்புக்கில் பணியாளரின் பிஎஃப் கணக்கில் செலுத்தப்பட்ட மொத்தத் தொகை, பணியாளர் மர்றும் நிறுவனம் என இரு தரப்பினரும் செலுத்தும் மாதாந்திர பங்களிப்புகளின் விவரங்களும் இருக்கும்.
  • பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் EPF இருப்பை ஆஃப்லைனிலோ அல்லது ஆன்லைனிலோ சரிபார்க்கலாம்.
உங்கள் பிஎஃப் கணக்கில் நிறுவனம் பணத்தை டெபாசிட் செய்ததா? நிமிடங்களில் இப்படி செக் செய்யலாம் title=

EPFO Update: அலுவலக பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சார்பில் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான பணம், அவர்களது சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. பொதுவாக ஊழியர்களுக்கு இது ஓய்வூதிய நிதிக்கான முதல் படியாக இருக்கும். உங்கள் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து அந்த தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியரின் கணக்கில் டெபாசிட் செய்யும். அந்த தொகைக்கு அரசாங்கம் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வருடாந்திர வட்டியும் வழங்குகிறது. 

அனைத்து இபிஎஃப்ஓ (EPFO ) சந்தாதாரர்களுக்கும் ஆன்லைன் இபிஎஃப் உறுப்பினர் பாஸ்புக் வழங்கப்படும். இந்த பாஸ்புக்கில் பணியாளரின் பிஎஃப் கணக்கில் செலுத்தப்பட்ட மொத்தத் தொகை, பணியாளர் மர்றும் நிறுவனம் என இரு தரப்பினரும் செலுத்தும் மாதாந்திர பங்களிப்புகளின் விவரங்களும் இருக்கும். பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் EPF இருப்பை ஆஃப்லைனிலோ அல்லது ஆன்லைனிலோ சரிபார்க்கலாம். தங்கள் இபிஎஃப் இருப்பைச் சரிபார்க்க பணியாளர்கள் இப்போது SMS, மிஸ்ட் கால், இபிஎஃப்ஓ செயலி / உமங் செயலி அல்லது EPFO போர்ட்டலைப் பயன்படுத்தலாம். பல்வெறு வழிகளில் பிஎஃப் இருப்பை சரிபாப்பதற்கான செயல்முறை விளக்க்கத்தை இந்த பதிவில் காணலாம். 

பிஎஃப் இருப்பை செக் செய்யும் முறைகள்

இபிஎஃப் எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி, ஒரு பணியாளரின் நிதி நலனுக்கு முக்கியமானது. இது தனிநபர் மற்றும் நிறுவனத்திடமிருந்து சமமான மாதாந்திர பங்களிப்புகளைப் பெறும் ஓய்வூதியக் கணக்கு. ஒவ்வொரு EPFO உறுப்பினர் பணியாளருக்கும் ஆன்லைன் EPF உறுப்பினர் பாஸ்புக் வழங்கப்படும். இந்த பாஸ்புக் ஊழியரின் PF கணக்கில் செலுத்தப்பட்ட மொத்தத் தொகை மற்றும் ஒவ்வொரு தரப்பினரின் மாதாந்திர பங்களிப்புகளின் பிரத்தியேக விவரங்களையும் பட்டியலிடுகிறது. ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் EPF இருப்பைச் சரிபார்ப்பது இப்போது எளிதாகி விட்டது. ஊழியர்களின் EPF இருப்பைக் கண்காணிக்க நிறுவனத்தால் பகிரப்பட்ட வருடாந்திர EPF அறிக்கை இனி தேவையில்லை. ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் தங்கள் EPF இருப்பைச் சரிபார்க்க பயனர்களுக்கு வசதி உள்ளது.

ஒரு பணியாளரின் EPF பாஸ்புக்கிற்கான அணுகல் EPFO போர்டல் (EPFO Portal) மூலம் கிடைக்கிறது. இருப்பினும், ஒவ்வொரு பணியாளரும் செயலில் உள்ள மற்றும் தற்போதுள்ள UAN ஐ வைத்திருக்க வேண்டும். PF இருப்பைச் சரிபார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்

EPFO போர்ட்டலில் பாஸ்புக்கை இப்படி செக் செய்யலாம்: 

ஸ்டெப் 1- முதலில், https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற EPFO ​​போர்ட்டலுக்குச் செல்லவும். இதற்கு உங்களின் UAN (Universal Account Number)ஐ ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஸ்டெப் 2- போர்டல் திறந்தவுடன்,  'Our Services' டேபிற்குச் சென்று, ‘for employees’ என்ற ட்ராப்-டவுன் மெனுவைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 3- சர்விஸ் காலமிற்கு கீழே உள்ள 'member passbook' என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 4- உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் வழங்கப்பட்ட கேப்ட்சாவை உள்ளிட்டு லாக் இன் செய்யவும். 

ஸ்டெப் 5- லாக் இன் செய்ததும், உங்கள் PF இருப்பை உடனடியாகக் காண உங்கள் உறுப்பினர் ஐடி -யை உள்ளிடவும்.

ஸ்டெப் 6- இதற்குப் பிறகு உங்கள் EPF இருப்பு தெரியும். இதில், கணக்கு இருப்பு, அனைத்து வைப்புத்தொகை விவரங்கள், நிறுவன ஐடி, உறுப்பினர் ஐடி, அலுவலக பெயர், பணியாளர் பங்கு மற்றும் முதலாளி பங்கு பற்றிய தகவல்களையும் பெறுவீர்கள்.

உமங் செயலி மூலம் இந்த வகையில் செக் செய்யலாம்

- உமங் ஆப் (UMANG App) பல அரசு சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது.

- EPF-க்கு, Google Play Store அல்லது Apple App Store இலிருந்து UMANG செயலியை பதிவிறக்கவும்.

- உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்.

- பின்னர், "அனைத்து சேவைகள்" டேபின் கீழ், 'EPFO' ஐத் சர்ச் செய்யவும்.

- 'பணியாளர் மைய சேவைகள்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- பின்னர் ‘பாஸ்புக்கைக் காண்க’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட UAN மற்றும் OTP ஐ உள்ளிடவும்.

- இதில் லாக் இன் செய்தவுடன் நீங்கள் உள்நுழைந்ததும், உங்கள் EPF இருப்பைக் காணலாம்.

மேலும் படிக்க | உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும் EPFO! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை சரிபார்ப்பதற்கான வழிமுறைகள்

உங்கள் KYC தகவலுடன் UAN இணைக்கப்பட்டவுடன், SMS மூலம் PF இருப்பைச் சரிபார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்

- முதலில் 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

- "EPFOHO UAN ENG" என்ற வடிவமைப்பைப் பயன்படுத்தி செய்தி அனுப்பப்படும்.

- SMS இல், நீங்கள் தேர்ந்தெடுத்த தகவல்தொடர்பு மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

- இதைச் செய்ய, நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியின் முதல் மூன்று எழுத்துக்களை உள்ளிடவும். ஆங்கிலத்தில் புதுப்பிப்புகளைப் பெற “English” (EPFOHO UAN ENG) என்ற வார்த்தையின் முதல் மூன்று எழுத்துக்களைப் பயன்படுத்தவும். தமிழில் செய்தி அறிவிப்புகளைப் பெற TAMIL -இல் TAM முதல் மூன்று எழுத்துக்களைப் பயன்படுத்தவும் (EPFOHO UAN TAM).

- இந்த சேவை பெங்காலி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ், மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம் மற்றும் பல மொழிகளில் வழங்கப்படுகிறது.

மிஸ்டு கால் மூலம் PF இருப்பை சரிபார்க்கும் செயல்முறை

EPF உறுப்பினர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் இருந்து மிஸ்ட் கால் (Missed Call) கொடுத்து தங்கள் பிஎஃப் இருப்புத் தொகையைச் சரிபார்க்கலாம். இருப்பினும், இந்தச் சேவையைப் பயன்படுத்த, பணியாளரின் நிரந்தரக் கணக்கு எண் (PAN), ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஆகியவை அவர்களின் UAN உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மிஸ்ட் கால் மூலம் PF இருப்பைச் சரிபார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்

- முதலில், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் ஃபோனில் இருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுங்கள். 

- மிஸ்ட் கால் செய்த பிறகு, உங்கள் PF தகவலுடம் கூடிய SMS ஒன்றைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாம இருக்கணுமா... ‘இவற்றில்’ முதலீடு செய்யுங்க!

Trending News