கடன் தேவைப்படுபவர்கள் இப்போது paytm செயலி மூலம் ஐநூறு, ஆயிரம் ரூபாய் அல்ல, இரண்டு லட்சம் ரூபாய் கடன் பெற்றுக்கொள்ளலாம். ஸ்மார்ட் போனுக்குள் இருக்கும் இந்த இ-வாலட்டை, எந்த பயனர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும், இதன்மூலம் Paytm செயலி பயனர்களுக்கு நல்ல நேரம் வந்துள்ளது. விஜய் சேகர் சர்மாவுக்குச் சொந்தமான Paytm ஆனது, இப்போது அதன் பயனர்களுக்கு 5 நிமிடங்களுக்குள் அல்லது 2 நிமிடங்களில் ரூ.2 லட்சம் வரை உடனடி கடனைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
மேலும் படிக்க | குறைவான வட்டியில் வீட்டு கடன் வழங்கும் வங்கிகள்!
கடனுக்கு விண்ணப்பிப்பது முதல் பணம் உங்கள் கணக்கைச் சென்றடையும் வரை முழு செயல்முறையும் ஆன்லைனில் இருப்பதால், கடன் முற்றிலும் டிஜிட்டல் முறையில் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிக்குச் சென்று அலைந்து திரிந்து ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. சமீபத்தில், இந்நிறுவனம் உடனடி தனிநபர் கடன் சேவையைத் தொடங்கியுள்ளது, இந்த சேவையின் மூலம் குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களும் பலன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், Paytm பயனர்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் மொபைலில் இருந்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்ப செயல்முறை முடிந்த சில நிமிடங்களில், இரண்டு லட்சம் ரூபாய் வரை உங்கள் கணக்கில் வரும். உடனடி தனிநபர் கடனைப் பெற, வாடிக்கையாளர்கள் Paytm செயலிக்குச் சென்று, நிதிச் சேவைகள் விருப்பத்தில் உள்ள 'தனிப்பட்ட கடன்' என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்குப் பிறகு, சில தகவலை நீங்கள் வழங்க வேண்டும், அதன் பிறகு உங்கள் தகுதி சரிபார்க்கப்பட்டு, அதன் பிறகு பணம் உங்கள் கணக்கிற்கு மாற்றப்படும்.
Paytm இதுவரை நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட கடன்களை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 10 லட்சம் பேருக்கு தனிநபர் கடன்களை வழங்குவதே ஆகும். இந்த திட்டத்தின் மூலம் Paytm தனது பயனர் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறது. இதன்படி, தனிநபர் கடன் பெற்றவர்கள் 18 முதல் 36 மாதங்களில் கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும். Paytm-ன் சமீபத்திய கடன் சேவைக்காக பல வங்கிகள் மற்றும் என்பிஎஃப்சிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
மேலும் படிக்க | ஆன்லைனில் PF கணக்கின் இருப்பை சரிபார்ப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR