EPF Withdrawal Rules: அலுவலக பணிகளில் வேலை செய்பவர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி (EPF) அவர்களின் ஓய்வூதியத்திற்கான முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் பணியாளர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள். பணியாளர் செலுத்தும் அதே தொகையை முதலாளி / நிறுவனமும் செலுத்துகின்றன. இது மறைமுகமாக பணியாளர்களுக்கு எதிர்காலத்திற்கான ஒரு நல்ல சேமிப்பாக அமைகின்றது. மிகவும் பாதுகாப்பான, நல்ல வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு முதலீட்டு திட்டமாக இது உள்ளது.
இபிஎஃப்ஓ (EPFO) அதன் உறுப்பினர்களுக்கு திருமணம், கல்வி, வீடு கட்டுதல், வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் வேலையின்மை ஆகியவற்றிற்காக முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறும் வசதியை (EPFO Advance) வழங்குகிறது. பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்லாளாம்.
மனிதர்களாகிய நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை ஏற்படுகின்றது. இதற்கு பல சமயங்களில் கடன்களின் உதவியை பெற வேண்டியுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரிபவர்கள் ஒவ்வொரு மாதமும் பிஎஃப் கணக்கில் (PF Account) ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு ஏராளமான நிதி நன்மைகள் கிடைக்கின்றன. பிஎஃப் உறுப்பினர்களுக்கு இபிஎஃப்ஓ மூலம் பல வசதிகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் தேவைப்படும் நேரத்தில் முன்பணம், அதாவது அட்வான்ஸ் பெறுவதற்கான வசதியும் ஒன்றாகும். பொதுவாக பணி ஓய்வு பெற்றவுடன்தான் பிஎஃப் தொகை எடுக்கப்படுகின்றது. எனினும், பணி ஓய்வுக்கு முன்னரே சில அவசர தேவைகளோ அல்லது அத்தியாவசிய தேவைகளோ ஏற்பட்டால், பிஎஃப் உறுப்பினர்கள் அட்வான்சாக தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். அட்வான்சாக பிஎஃப் உறுப்பினர்கள் எப்போது, எவ்வளவு பணத்தை எடுக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிஎஃப் -இலிருந்து பணம் எடுப்பதற்கான விதிகள்
பிஎஃப் -இலிருந்து, வீட்டிற்கான நிலம் வாங்குதல், வீட்டைப் புதுப்பித்தல், வீட்டுக் கடன், பிஎஃப் உறுப்பினர் அல்லது உறுப்பினரின் குடும்ப உறுப்பினரது திருமணம், குழந்தைகளின் கல்வி, வேலை இழப்பு, பிஎஃப் உறுப்பினருக்கோ அல்லது குடும்ப உறுப்பினருக்கோ சிகிச்சை அளிப்பதற்கான செலவு ஆகியவற்றிற்காக பணத்தை எடுக்கலாம். இதற்கான விதிகளை இங்கே தெறிந்து கொள்வோம்.
- பிஎஃப் உறுப்பினரோ அல்லது உறுப்பினரின் குடும்பத்தில் உள்ள நபரோ ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அல்லது ஏதேனும் தீவிர நோய் அல்லது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியிருந்தால், பிஎஃப் கணக்கிலிருந்து ஆறு மாத சம்பளத்திற்கு இணையான பணத்தை எடுக்கலாம்.
- பிஎஃப் உறுப்பினர் அல்லது அவரது குடும்ப உறுப்பினரின் திருமணத்திற்காகவும் பிஎஃப் -இல் இருந்து பணத்தை எடுக்கலாம். இருப்பினும், இதற்கான நிபந்தனை என்னவென்றால், உறுப்பினர் பணியில் 7 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும். உறுப்பினர் தனது பிஎஃப் பங்களிப்பில் 50 சதவீதம் வரை மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.
- வேலையை விட்ட பிறகும் பி.எஃப்-ல் பணம் எடுக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சில காரணங்களால் உங்கள் நிறுவனம் 15 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்தால் அல்லது இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீங்கள் வேலை இல்லாமல் இருந்தால், உங்கள் பிஎஃப் -இல் டெபாசிட் செய்யப்பட்ட முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம்.
- வீடு வாங்குவதற்கும் பிஎஃப் தொகையிலிருந்து முன்பணம் எடுக்கலாம். இந்த முன்பணம் உங்கள் 36 மாத சம்பளத்திற்கு சமமாக இருக்கும். இதற்கு 5 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் என்பது நிபந்தனை.
- வீடு கட்டுவதற்கும், வீட்டைப் பழுதுபார்ப்பதற்கும், நிலம் வாங்குவதற்கும் பி.எஃப்-ல் பணம் எடுக்கலாம். வேலை தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வசதி கிடைக்கும். வீடு கட்ட, நிலம் வாங்க 24 மாத சம்பளத்துக்கும், வீட்டை சீரமைக்க 12 மாத சம்பளத்துக்கும் இணையான பணத்தை எடுக்கலாம்.
- வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த, 36 மாத சம்பளத்திற்கு சமமான பணத்தை எடுக்கலாம். இருப்பினும், இதற்கு நீங்கள் பணியில் 10 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும்.
- ஒருவரின் சொந்த மற்றும் குழந்தைகளின் கல்வியை முடிக்க பிஎஃப் -இலிருந்து முன்பணத்தை திரும்பப் பெறலாம். இதற்கு 7 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும். இதில், உங்கள் பங்களிப்பில் 50 சதவீதத்திற்கு மேல் திரும்பப் பெற முடியாது.
மேலும் படிக்க | அறிவிக்கப்படாத கட்டண வசூல்! வெட்ட வெளிச்சமான Google payஇன் தகிடுதத்தங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ