GST Council Meeting: மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 54வது கூட்டத்தில் அரசு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. சில எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சில ஏமாற்றங்களும் உள்ளன. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள சில முக்கிய முடிவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
சுகாதார காப்பீடு மீதான வரி விகிதத்தை குறைக்க, அமைச்சர்கள் குழுவை அமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் குழு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) திங்கள்கிழமை தெரிவித்தார். புற்றுநோய் மருந்துகள் மற்றும் சிற்றுண்டிகள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றுக்கு குறைந்தது ஜிஎஸ்டி
திங்கள்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், புற்றுநோய் மருந்துகளுக்கான வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், நம்கீன் எனப்படும் சிற்றுண்டிகளுக்கான வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
சுகாதாரக் காப்பீடு தொடர்பான முடிவு
திங்கள்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 54-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல் அளித்த நிதி அமைச்சர் (Finance Minister), சுகாதாரக் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைப்பது குறித்து பரிசீலிக்க அமைச்சர்கள் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் செயல்படும் என்றும் நிதி அமைச்சர் கூறினார். ஜிஎஸ்டி விகிதத்தை பகுத்தாய்வு செய்யும் அமைச்சர்கள் குழுவிற்கும் அவர் தலைமை தாங்குவார். சுகாதார காப்பீடு மீதான ஜிஎஸ்டி விகிதம் குறித்து விவாதித்து முடிவெடுக்க, அமைச்சர்கள் குழுவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த GNUP தனது அறிக்கையை அக்டோபர் இறுதிக்குள் சமர்ப்பிக்கும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் ஜிஎஸ்டி வசூல்
- மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் (Monthly GST Collection) அதிகரிப்பால் வரி செலுத்துவோருக்கு (Taxpayers) சாதகமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- பெரும்பாலான மாநிலங்கள் காப்பீட்டு பிரீமியம் விகிதங்களைக் குறைக்க ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால், பிரீமியம் தொகை குறையும் என்பதால், கோடிக்கணக்கான பாலிசிதாரர்களுக்கு அது பயனளிக்கும் வகையில் இருக்கும்.
ஆன்லைன் கேமிங்கில் இருந்து அதிக ஜிஎஸ்டி வருமானம்
ஆன்லைன் கேமிங்கிற்கு (Online Gaming) ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதால் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதாக
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறியுள்ளார். ஆன்லைன் கேம்களுக்கான ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டதில் இருந்து, கடந்த ஆறு மாதங்களில் வருவாய் 412 சதவீதம் அதிகரித்து ரூ.6909 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேசினோக்கள் வருவாயில் 30 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஐஜிஎஸ்டி (ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி) தொடர்பாக கூடுதல் செயலாளர் (வருவாய்) தலைமையில் செயலாளர்கள் குழு அமைக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார். இதில் ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ளதாகவும், இந்த குழு மாநிலங்களில் இருந்து நிதியை திரும்பப் பெறுவதற்கான வழிகளை ஆராயும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | சம்பள உயர்வுடன் 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட் விரைவில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ