டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீனாவின் 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை

இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் சீன நிறுவனங்களின்  ஹலோ, டிக்டாக் உட்பட பல பிரபலமான செயலிகளை தடைசெய்வதாக இந்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 29, 2020, 10:13 PM IST
  • டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீனாவின் 59 மொபைல் செயலிகளுக்குத் தடை
  • இந்திய எல்லையில் சீனா ஏற்படுத்திவரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்திய அரசு அதிரடி முடிவு
  • இந்திய பயனர்களின் தரவுகளை வெளிநாட்டினருக்கு அங்கீகாரம் இல்லாமல் கொடுப்பதாக புகார்
  • இந்திய இறையாண்மையை காக்கும் விதமாக நடவடிக்கை என்று அரசு விளக்கம்
  • இளைஞர்களின் தினசரி நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் திடீர் முடிவு இது
டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீனாவின் 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை  title=

புதுடெல்லி: இந்தியா - சீனா இடையில் எல்லையில் பதற்றங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் சில நாட்களாகவே சீனாவுடன் வர்த்தகத்தை குறைக்கவேண்டும், சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்தியாவில் அதிகரித்துவந்தன.

இந்த நிலையில் இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் சீன நிறுவனங்களின்  ஹலோ, டிக்டாக் உட்பட பல பிரபலமான செயலிகளை தடைசெய்வதாக இந்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு ஊறுவிளைப்பதாக இருப்பதால்” இந்த 59 செயலிகளை தடைசெய்வதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

Also Read | லாக்டவுன் ஆகுமா தங்கத்தின் விலை?

இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Information Technology) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 59 மொபைல் செயலிகள் தடை செய்யப்படுகின்றன. அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கக்கூடிய சில மொபைல் செயலிகள் தவறாகப் பயன்படுத்துவது பற்றிய தொடர்பான பல புகார்கள் பல்வேறு தளங்களில் இருந்து வந்துள்ளதாகவும் அமைச்சகம் கூறுகிறது.

அங்கீகாரம் இல்லாமல்,  இந்தியாவுக்கு வெளியே உள்ள இடங்களைக் கொண்ட சேவையகங்களுக்கு பயனர்களின் தரவை அனுப்புவதாக இந்த அறிக்கை கூறுகிறது. "இந்த தரவுகளை கசியவிடுவது என்பது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கேடு விளைவிக்கக்கூடியது. இது அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய ஆழமான மற்றும் உடனடி கவலைக்குரிய விஷயம். அதுமட்டுமல்ல, தரவு பாதுகாப்பு தொடர்பான அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பது தொடர்பான கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது”என்று மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.

Also Read | தப்லிகி ஜமாத் தலைவருக்கும் தாஹிர் உசேனுக்குமான தொடர்பு உண்மை: அமலாக்கத் துறை

இதுபோன்ற கவலைகளை களையும் நோக்கில், தவறுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற பரிந்துரையை உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையமும் (Indian Cyber Crime Coordination Centre, Ministry of Home Affairs) அனுப்பியுள்ளது.

கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சி.இ.ஆர்.டி-இன்) (The Computer Emergency Response Team (CERT-IN)) என்ற அரசுத் துறைக்கு தரவுகளின் பாதுகாப்பு மற்றும் சில செயலிகளின் செயல்பாடு தொடர்பான தனியுரிமைக்கான ஆபத்து குறித்த புகார்கள் வந்துள்ளன" என்று மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.

"இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான இந்திய மொபைல் மற்றும் இணைய பயனர்களின் நலன்களைப் பாதுகாக்கும். இந்த முடிவு இந்திய சைபர்ஸ்பேஸின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்வதற்கான ஒரு இலக்கு நடவடிக்கை"என்று இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read | தண்ணீருக்குள் தன்னை மறந்த நடிகை ஸ்ருதிஹாசனின் கவர்ச்சிப் புகைப்படங்கள்

தடைசெய்யப்பட்ட சீனாவின் செயலிகள் (Chinese apps):

1. TikTok2. Shareit3. Kwai4. UC Browser5. Baidu map6. Shein7. Clash of Kings8. DU battery saver9. Helo10. Likee11. YouCam makeup12. Mi Community13. CM Browers14. Virus Cleaner15. APUS Browser16. ROMWE17. Club Factory18. Newsdog19. Beutry Plus20. WeChat21. UC News22. QQ Mail23. Weibo24. Xender25. QQ Music26. QQ Newsfeed27. Bigo Live28. SelfieCity29. Mail Master30. Parallel Space31. Mi Video Call - Xiaomi32. WeSync33. ES File Explorer34. Viva Video - QU Video Inc35. Meitu36. Vigo Video37. New Video Status38. DU Recorder39. Vault- Hide40. Cache Cleaner DU App studio41. DU Cleaner42. DU Browser43. Hago Play With New Friends44. Cam Scanner45. Clean Master - Cheetah Mobile46. Wonder Camera47. Photo Wonder48. QQ Player49. We Meet50. Sweet Selfie51. Baidu Translate52. Vmate53. QQ International54. QQ Security Center55. QQ Launcher56. U Video57. V fly Status Video58. Mobile Legends59. DU Privacy

Trending News