EPFO Updates: நீங்கள் EPFO-இல் கணக்கு வைத்திருந்தால், EPFO அதன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காப்பீட்டு வசதியை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது என்பதை அறிந்து கொள்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். EPFO-இன் அனைத்து உறுப்பினர்களும் இந்த வசதியைப் பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். இதற்கு அவர்கள் எந்த பிரீமியமும் செலுத்த தேவையில்லை. இந்தக் காப்பீட்டு வசதியைப் பெற நீங்கள் தனியாக எதுவும் செய்ய வேண்டியதில்லை என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். EPFO உறுப்பினர் அகால மரணம் அடைந்தால், அவருடைய காப்பீட்டை அவரின் குடும்பத்தினர் பெறலாம். இந்த வசதி தொடர்பான விதிகள் என்ன என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
காப்பீட்டை யார் கோரலாம்?
EPFO உறுப்பினர் இறந்த பிறகு காப்பீட்டுத் தொகை அவர்களின் குடும்பத்தினருக்கு செலுத்தப்படும். EPFO உறுப்பினரின் மரணத்திற்குப் பிறகு, காப்பீட்டுத் தொகையானது அவரால் பரிந்துரைக்கப்பட்டவர் அல்லது அவரது வாரிசு மூலம் கோரப்பட வேண்டும். பணியின் போது EPFO ஊழியர் இறந்தால், நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசு காப்பீட்டிற்காக கோரலாம். இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.2.5 லட்சம். அதேசமயம், அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.7 லட்சம். காப்பீட்டுத் தொகை நேரடியாக நாமினியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | EPFO மிகப்பெரிய அப்டேட்: அதிகரிக்கிறது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்!!
காப்பீட்டுத் தொகை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
இறந்த EPFO ஊழியரின் கடைசி 12 மாத சம்பளத்தின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை கணக்கிடப்படுகிறது. காப்பீட்டுத் தொகை கடந்த 12 மாதங்களில் பெறப்பட்ட அடிப்படைச் சம்பளத்தை விட 35 மடங்கு அதிகமிருக்கும். அதே நேரத்தில், அதன் அதிகபட்ச வரம்பு 7 லட்சம் ரூபாய். இதற்கு முன் காப்பீட்டின் அதிகபட்ச வரம்பு 6 லட்சம் ரூபாயாக இருந்தது என்பது நினைவுக்கூரத்தக்கது. ஆனால் தற்போது அரசு, ஒரு லட்சம் ரூபாயை அதில் உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில், இதன் கீழ், குறைந்தபட்சம் 2.5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுகிறது.
நாமினியின் பெயரை பதிவு செய்வது மிகவும் முக்கியம்
EPFO உறுப்பினர்கள் நாமினியின் பெயரை தங்கள் கணக்கில் பதிவு செய்ய வேண்டும். கணக்கில் ஒரு நாமினி இருப்பதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், ஒரு கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அவரது குடும்பம் EPF, EPS மற்றும் EDLI திட்டங்களின் பலன்களைப் பெறுவதில் எந்த சிரமத்தையும் சந்திக்காது.
மறுபுறம், எந்தவொரு கணக்கிலும் நாமினியின் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால், அத்தகைய சூழ்நிலையில், கணக்கு வைத்திருப்பவரின் அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளும் பணத்தைப் பெறுவதற்கு நிறைய ஆவணங்களை சமர்பிக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக காப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ