வீட்டில் எவ்வளவு நகைகள் வைத்து இருக்கலாம்? புதிய விதிகள் அமல்!

ஒரு வீட்டில் வரம்புக்கு உட்பட்டு தங்க நகைகள் அல்லது தங்கத்தினாலான எதாவது ஒரு பொருட்கள் இருந்தால் அதனை அதிகாரிகள் கைப்பற்ற முடியாது என்றும் தங்கம் தொடர்பான விதிகள் தெரிவிக்கிறது.    

Written by - RK Spark | Last Updated : Mar 22, 2023, 11:31 AM IST
  • திருமணமான பெண்கள் 500 கிராம் வரையிலான தங்கத்தை வைத்திருக்கலாம்.
  • திருமணமாகாத பெண்கள் வீட்டில் 250 கிராம் வரையிலான தங்கத்தை வைத்திருக்கலாம்.
  • குடும்பத்தில் உள்ள ஆண்கள் 100 கிராம் வரையிலான தங்கத்தை வைத்திருக்கலாம்.
வீட்டில் எவ்வளவு நகைகள் வைத்து இருக்கலாம்? புதிய விதிகள் அமல்! title=

தங்கம் எவ்வளவு விலைமதிப்பானது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை, தங்கம் வாங்குவதும் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.  மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் தங்கம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது, பெண்கள் பலரும் தங்கத்தில் ஆபரணங்கள் அணிவதை தான் விரும்புகின்றனர். இந்தியாவில் தங்கம் வாங்குவதை ஒரு மங்களகரமான விஷயமாக நம்புகின்றனர்.  தங்கத்தை அணிகலன்களாகவும், நாணயங்களாகவும், கட்டிகளாவும் என பல்வேறு வடிவங்களில் வீட்டில் வைத்திருக்க பலரும் விரும்புகின்றனர்.  வீட்டில் தங்கம் இருந்தால் செழிப்பாக இருக்கும் என்று இந்திய மக்கள் பலரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.  இவ்வளவு அதிக மதிப்புள்ள உலோகமான தங்கத்தை நாம் பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் அது தொடர்பான அரசாங்க விதிகளைப் பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.

மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் இனி இல்லை! கை கொடுக்கும் NPS திட்டம்!

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) கூற்றுப்படி, ஒரு தனிநபர் தங்கத்தை வெளிப்படுத்திய வருமானம் அல்லது விவசாய வருமானம் போன்ற விலக்கு அளிக்கப்பட்ட வருமானம் அல்லது நியாயமான குடும்பச் சேமிப்பில் இருந்து அல்லது விளக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து சட்டப்பூர்வமாக பெற்றிருந்தால் அதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்று கூறியுள்ளது.  சோதனை நடவடிக்கைகளின் போது, ​​நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டு ஒரு வீட்டில் தங்க நகைகள் அல்லது தங்கத்தினாலான எதாவது ஒரு பொருட்கள் இருந்தால் அதனை அதிகாரிகள் கைப்பற்ற முடியாது என்றும் தங்கம் தொடர்பான விதிகள் தெரிவிக்கிறது.  தங்க விதிகளின்படி வீட்டில் திருமணமான பெண் 500 கிராம் வரை தங்கத்தையும், திருமணமாகாத பெண் 250 கிராம் தங்கத்தையும், குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்கள் 100 கிராம் வரையில் தங்கத்தையும் வைத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் வைத்திருக்கும் தங்கத்திற்கு சட்டப்பூர்வமாக ஆதாரம் வைத்திருப்பது உங்களுக்கு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.  விளக்கப்பட்ட வருமான ஆதாரங்கள் மூலம் தங்கம் வாங்கப்படும் வரை அதை சேமிப்பதில் வரம்பு இல்லை.  மூன்றாண்டுகளுக்கு மேல் உங்களிடம் இருக்கும் நீங்கள் விற்க முடிவு செய்தால் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் நீண்ட கால மூலதன ஆதாய வரிக்கு (எல்டிசிஜி) உட்பட்டதாக இருக்கும், இது 20 சதவிகிதம் குறியீட்டு நன்மையுடன் இருக்கும்.  அதேசமயம் தங்கத்தை வாங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் அதை விற்றால், அந்த ஆதாயம் தனிநபரின் வருமானத்துடன் சேர்க்கப்படும் மற்றும் பொருந்தக்கூடிய வரி அடுக்கின்படி வரி விதிக்கப்படும்.  சவரன் கோல்ட் பாண்டுகள் (எஸ்ஜிபி) விற்கும் விஷயத்தில் கிடைக்கும் லாபம் உங்கள் வருமானத்தில் சேர்க்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட வரி அடுக்கின்படி வரி விதிக்கப்படும்.  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ஜிபிகள் விற்கப்படும்போது, ​​ஆதாயங்கள் குறியீட்டுடன் 20 சதவிகிதம் மற்றும் குறியீட்டு இல்லாமல் 10 சதவிகிதம் என்ற விகிதத்தில் வரி விதிக்கப்படும்.  பாண்டுகளை முதிர்வு காலம் வரை வைத்திருந்தால் அதில் கிடைக்கும் லாபத்திற்கு எவ்வித வரியும் விதிக்கப்படாது.

மேலும் படிக்க | Bank FD: உங்க பணம் சீக்கிரமா இரட்டிப்பாகனுமா? இந்த வங்கியில டெபாசிட் செய்யுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News