இன்று முதல் தங்கத்திற்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்; முக்கிய விபரம் உள்ளே..!!

நாம் விலை அதிகம் கொடுத்து வாங்கும் தங்கம், நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ற சுத்தமானதாக உள்ளதா என்றால், பல இடங்களில் நிச்சயம் அவ்வாறு இல்லை என்று தான் கூற வேண்டும்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 15, 2021, 08:46 AM IST
  • தங்கம் விலை உச்சத்தில் இருந்தாலும் தங்க கடைகளில் கூட்டம் என்றுமே குறைவதில்லை.
  • நாம் விலை அதிகம் கொடுத்து வாங்கும் தங்கம், நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ற சுத்தமானதாக உள்ளதா என்றால் இல்லை.
  • பல முறைகேடுகளை தடுப்பதற்காக, தங்க நகைகளை விற்கும் போது அதில் ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.
இன்று முதல் தங்கத்திற்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்; முக்கிய விபரம் உள்ளே..!! title=

இந்தியாவில், அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் தங்க நகைகளின் மீது மக்களுக்கு ஒரு மோகம் உள்ளது என்றால் மிகை இல்லை.

தங்கம் விலை உச்சத்தில் இருந்தாலும் தங்க கடைகளில் கூட்டம் என்றுமே குறைவதில்லை. நாம் விலை அதிகம் கொடுத்து வாங்கும் தங்கம் (Gold), நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ற சுத்தமானதாக உள்ளதா என்றால், பல இடங்களில் நிச்சயம் அவ்வாறு இல்லை என்று தான் கூற வேண்டும்.  இதில் நடக்கும் பல முறைகேடுகளை தடுப்பதற்காக, தங்க நகைகளை விற்கும் போது அதில் ஹால்மார்க் முத்திரை (Hallmark) இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, தங்க நகை விற்பனையாளர்கள் இனி, 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை செய்ய வேண்டும். மேலும் இந்திய தர நிர்ணய அமைப்பு BIS சான்றான ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இடம்பெற வேண்டும்.

ALSO READ | செகண்ட் ஹேண்ட் கார் வாங்குகிறீர்களா? குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் வங்கி விபரம்

நாடு முழுவதும், தற்போது  234 மாவட்டங்களில் 892 ஹால்மார்க் மதிப்பீடு மற்றும் முத்திரை வழங்கும் மையங்கள் உள்ளன. சுமார் 35,879 நகைக்கடைகள் இதில் பதிவு செய்துள்ளன

இதுவரை நாட்டில் தங்க ஹால்மார்க்கிங் நகைகள் விற்கப்படவில்லை என்பது அல்ல, ஆனால் அது கட்டாமாக்கப்படவில்லை.  பல பெரிய நகைக்கடைக்காரர்கள் தங்க ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளைத் தான் விற்பனை செய்கிறார்கள். 

இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அனைத்து நகைக்கடைக்காரர்களும்  தற்போது, ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களுக்கான தங்க ஹால்மார்க்கிங் விதிகளை மத்திய அரசு 2019 நவம்பரில் அறிவித்திருந்தது. இந்த விதிகள் 2021 ஜனவரி முதல் அமல்படுத்தப்பட இருந்தன. ஆனால் கொரோனா தொற்றுநோய் (Coronavirus) காரணமாக, நகைக்கடைக்காரர்கள் அரசாங்கத்திடம்  காலகெடுவை நீட்டிக்குமாறு கோரினர். ஜூன் 1 வரை, தங்க ஹால்மார்க்கிங் காலக்கெடு 4 முறை நீட்டிக்கப்பட்டது, அதன் பிறகு  காலக்கெடு மீண்டும் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டது.

கோல்ட் ஹால்மார்க்கிங் விதியை அமல்படுத்திய பின்னர், வீட்டில் பழைய தங்கம் இருந்தால் என்ன நடக்கும்  என கேள்வி எழலாம். வீட்டில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்கு இந்த விதி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. அவற்றை எளிதாக நகைக்கடைக்காரர்களுக்கு விற்கலாம். இருப்பினும், நகைக்கடைக்காரர்கள் இனி ஹால்மார்க் அடையாளமின்றி தங்கத்தை விற்க முடியாது.

ALSO READ | Driving License: இனி லைசென்ஸ் பெற RTO செல்ல தேவையில்லை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News