SBI WeCare FD: பொதுவாக, மூத்த குடிமக்கள் வங்கியில் நிலையான வைப்புத்தொகை (FD) திட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகளின் பலனைப் பெறுவார்கள். ஆனால் SBI WeCare திட்டத்தில் கூடுதல் 50 அடிப்படை புள்ளிகளின் பலனைப் பெறுகிறது. அதன்மூலம், மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் 1 சதவீதம் கூடுதல் வட்டியை பெற்று பலன் அடைவார்கள்.
ஒவ்வொருவரும் தங்கள் வருவாயில் ஒரு பகுதியைச் சேமித்து, தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். மேலும் அவர்கள் வலுவான வருமானத்தையும் பெற விரும்புவார்கள். அந்த வகையில், பெரும்பாலானோர் நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் முதலீடு செய்யவே எப்போதும் நினைப்பார்கள். இப்போது பல வங்கிகள் நிலையான வைப்புத்தொகை திட்டங்களுக்கு அதிக வட்டியை வழங்கி வருகின்றன.
மூத்த குடிமக்களைப் குறித்து நாம் பேசினால், அவர்கள் பொதுவான முதலீட்டாளர்களை விட அதிக வருமானத்தைப் பெறுகிறார்கள். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI WeCare Scheme) WeCare திட்டம் அத்தகைய ஒரு சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. இதில் முதலீடு செய்வதற்கான விரைவில் முடிய உள்ளது. அதனை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | ஆன்லைன் மோசடியில் சிக்கி விட்டீர்களா... நீங்கள் முதலில் செய்ய வேண்டியவை!
கடைசி தேதி எப்போது?
பொதுவாக, முதலீடு செய்யும் போது, மூத்த குடிமக்கள் ரிஸ்க் இல்லாத ஆப்ஷனை தான் தேர்வு செய்கிறார்கள். இதற்காக, நிலையான வைப்புத்தொகை திட்டங்கள் தங்களுக்குப் பிடித்த பட்டியலில் சேர்க்கப்படுகிறது. அந்த வகையில் SBI WeCare திட்டத்தைப் பற்றி பார்த்தால், அவர்கள் இதில் சிறந்த வருமானத்தைப் பெறுகிறார்கள். இருப்பினும், இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ளன. ஏனெனில் பாரத ஸ்டேட் வங்கியின் இந்த FD திட்டம் செப்டம்பர் 30ஆம் தேதியோடு முடிவடைகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்தத் திட்டத்தை எவ்வளவு விரைவாகப் பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு சிறப்பான பலனை பெறுவீர்கள்.
திட்டத்தின் நோக்கம்
பாரத ஸ்டேட் வங்கியின் இந்தத் திட்டத்தில், சாதாரண முதலீட்டாளர்களை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. SBI WeCare திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் 0.50 சதவீதம் வரை கூடுதல் வட்டியின் பலனைப் பெறுகிறார்கள். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு மூலம், 5 முதல் 10 ஆண்டுகளில் நல்ல வருமானத்தைப் பெறலாம். SBI WeCare சிறப்பு FD திட்டம் மூத்த குடிமக்கள் தங்கள் பணத்தை கோவிட் நேரத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஆப்ஷனாக அறிமுகப்படுத்தப்பட்டது.
பொதுவாக, மூத்த குடிமக்கள் வங்கியில் நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் 50 அடிப்படைப் புள்ளிகளைப் பெறுவார்கள். ஆனால் SBI WeCare நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் கூடுதல் 50 அடிப்படைப் புள்ளிகளின் பலனைப் பெறுவார்கள். அதாவது இந்த திட்டத்தில் முதியோர்களுக்கு 1 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும். தற்போது, SBI WeCare திட்டத்தில் 7.50 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. எஸ்பிஐயின் வழக்கமான நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் வட்டி விகிதங்கள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதிகளுக்கு 3.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை இருக்கும்.
சிறப்பு FD திட்டமான SBI WeCare திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலக்கெடு மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கோவிட் காலத்தில் தொடங்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான இந்த சிறப்புத் திட்டம் இந்தாண்டு ஜூன் 30ஆம் தேதி அன்று முடிவடைய இருந்தது. ஆனால் வங்கி அதன் காலக்கெடுவை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
மேலும் படிக்க | வங்கி கணக்கை மூட போறீங்களா... ‘இந்த’ விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ