உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? தெரிந்து கொள்ள எளிய வழிகள்!

Check PF Money: உங்கள் EPF கணக்கில் உள்ள தொகையை சரி பார்க்க பல வழிகள் உள்ளன.  இருப்பினும், UAN KYC முடிந்ததா என்பதை உறுதிப்படுத்தி கொள்வது அவசியம்.  

Written by - RK Spark | Last Updated : Mar 24, 2024, 12:07 PM IST
  • EPF கணக்கை ஆன்லைனில் சரி பார்க்கலாம்.
  • ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படுகிறது.
  • 12 சதவீதம் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும்.
உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? தெரிந்து கொள்ள எளிய வழிகள்!  title=

Check PF Money: வருங்கால வைப்பு நிதி ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்புக்கான சிறந்த வழியாக உள்ளது. இது பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவரின் பங்களிப்புகளை கொண்டுள்ளது.  ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் இருந்து EPFதானாகவே பிடித்தம் செய்யப்படும்.  இது பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யப்படுகிறது. எந்த ஒரு பணியாளரும் நேரடியாக EPF கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது, மாறாக அந்த நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்துக்கொண்டு PF பணத்தை டெபாசிட் செய்யும்.  பொதுவாக, ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 12% PFக்காக பிடித்தம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | ஹோலி பண்டிகைக்கு ஜாக்பாட்.. இலவசமாகப் பெறலாம் எல்பிஜி சிலிண்டர்

அதே நேரத்தில், ஒவ்வொரு நிறுவனமும் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் 12 சதவீதத்தை வழங்குகிறது. நிறுவனத்தின் பங்களிப்பில், 3.67 சதவீதம் EPF கணக்கில் வரவு வைக்கப்படுகிறது, அதே நேரத்தில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது.  உங்கள் EPF கணக்கில் மாதம் மாதம் பணம் டெபாசிட் செய்யப்பட்டவுடன் எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மேலும், நீங்களே உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை சரிபார்த்து கொள்ள முடியும்.  EPF பாஸ்புக், EPF எண், SMS, கால் போன்றவற்றின் மூலம் இருப்பை சரி பார்க்க முடியும்.

ஆன்லைனில் உங்கள் PF இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம்?

EPFO பாஸ்புக்: பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரும் PF கணக்கு விவரங்களை ஆன்லைனில் பார்ப்பதற்கு EPFO ​​உறுப்பினர் பாஸ்புக் போர்டல் உதவுகிறது.  இதற்கு முதலில் அதிகாரப்பூர்வ EPFO ​​உறுப்பினர் பாஸ்புக் போற்றுதலுக்கு சென்று, உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும். பிறகு PF கணக்கைத் தேர்வு செய்து, தற்போதைய நிலுவைத் தொகையை அணுக "PF பாஸ்புக்கைக் காண்க" என்பதைத் கிளிக் செய்யவும். இதன் மூலம் உங்களின் PF தொகையை சரிபார்க்கலாம்.

UMANG APP: UMANG ஆப் என்பது யுனிஃபைட் மொபைல் அப்ளிகேஷன் என்பதன் சுருக்கமாகும், இது இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப் ஆகும். இதன் மூலம் பல்வேறு அரசாங்க சேவைகளை ஒரே இடத்தில அணுக முடியும்.  பல்வேறு சேவைகளை வழங்கும் இந்த UMANG ஆப்பில், உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும். இதன் மூலம் உங்கள் EPF இருப்பு மற்றும் கூடுதல் விவரங்களை நீங்கள் பெற முடியும். 

SMS: உங்கள் UAN பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் 7738299899 என்ற எண்ணிற்கு SMS அனுப்பலாம். இதன் மூலம் உங்கள் PF கணக்கு விவரங்கள் உங்களுக்கு SMS மூலம் அனுப்பப்படும். 

Missed call: அதே போல, உங்கள் UAN பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். இதன் பிறகு உங்கள் EPF தகவலைக் SMS மூலம் பெறுவீர்கள்.  

மேலும் படிக்க | EPFO UAN Profile விவரங்களை எத்தனை முறை மாற்ற முடியும்? தேவையான ஆவணங்கள் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News