EPFO Alert: PF அக்கவுண்ட் இருக்கா, அப்போ இதை உடனே செஞ்சிடுங்க

EPFO Aadhaar Link: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஜூன் 1 முதல் PF கணக்கின் விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 7, 2021, 12:18 PM IST
  • EPF கணக்குகளையும் ஆதார் உடன் இணைப்பதை EPFO கட்டாயம்
  • ஆதார் வாயிலாக PF பணம் எடுப்பது சுலபமாகியுள்ளது.
  • ஆன்லைனில் எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம்.
EPFO Alert: PF அக்கவுண்ட் இருக்கா, அப்போ இதை உடனே செஞ்சிடுங்க title=

புது டெல்லி: EPFO Aadhaar Link: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஜூன் 1 முதல் PF கணக்கின் விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அனைத்து EPF கணக்குகளையும் ஆதார் உடன் இணைப்பதை EPFO கட்டாயமாக்கியுள்ளது. EPFO வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். புதிதாக திறக்கப்படும் PF கணக்குகள் ஆதார் மூலமாக துவக்கப்படுவதால் பிரச்சினையில்லை.

முன்பெல்லாம் ஊழியர்கள் தங்களது Provident Fund பணத்தை எடுக்க நிறைய சிரத்தை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், ஆதார் வாயிலாக PF பணம் எடுப்பது சுலபமாகியுள்ளது. அந்தவகையில் ஆன்லைனிலும், நேரடியாக Employees Provident Fund அலுவலகத்துக்கு சென்றும் ஆதாருடன் PF கணக்கை இணைக்கலாம். 

ALSO READ | உங்க பிஎஃப் பேலன்ஸை ஈசியாக எவ்வாறு செக் செய்வது

உங்கள் பிஎஃப் கணக்கு ஆதார் உடன் இணைக்கப்படவில்லை என்றால், நீங்கள் EPFO இன் பிற சேவைகளைப் பயன்படுத்த முடியாது. சமூக பாதுகாப்பு கோட் 2020 இன் பிரிவு 142 இன் கீழ் EPFO இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம்.

1. முதலில் நீங்கள் EPFO ​​வலைத்தளமான www.epfindia.gov.in இல் உள்நுழைய வேண்டும்.
2. இதற்குப் பிறகு, ஆன்லைன் சேவைகளுக்குச் செல்வதன் மூலம், e-KYC Portal கிளிக் செய்து, பின்னர் link UAN aadhar கிளிக் செய்யவும்.
3. உங்கள் UAN எண் மற்றும் UAN கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை நீங்கள் பதிவேற்ற வேண்டும்.
4. உங்கள் மொபைல் எண்ணில் OTP எண் வரும்.
5. உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை ஆதார் பெட்டியில் உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்
6. பின்னர் OTP verification ஐ கிளிக் செய்யவும்
7. ஆதார் விவரங்களை மீண்டும் சரிபார்க்க, ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் இல் OTP உருவாக்கப்பட வேண்டும்.
8. verification பிறகு, உங்கள் ஆதார் உங்கள் PF கணக்கில் இணைக்கப்படும்.

ALSO READ | PF Good news: கோவிட் முன்பணம் எடுக்க அரசு அனுமதி, இந்த முறையில் எளிதாக எடுக்கலாம்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News