Salary Hike: இந்த ஆண்டு சில துறைகளை சேர்ந்தவர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு காத்திருக்கிறது

எதிர்பார்த்ததை விட அதிகமான அலவில் பொருளாதார வளர்ச்சி இருப்பதால், இந்திய தனியார் நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 20, 2021, 05:00 PM IST
  • 60% நிறுவனங்கள் கடந்த ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படும் என உறுதியளித்திருந்தன.
  • இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் கடந்த ஆண்டு 4.4% என்ற அளவில் சம்பள உயர்வு அளித்தது.
  • இந்த ஆண்டு 20% நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை இரட்டை இலக்கத்தில் அதிகரிக்கப் போகின்றன.
Salary Hike: இந்த ஆண்டு சில துறைகளை சேர்ந்தவர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு காத்திருக்கிறது title=

கடந்த ஆண்டு, COVID-19 தொற்றுநோய் காரணமாக, நாட்டில் சம்பளம் பெறும் வர்க்கத்தினர் எவருக்கும் ஊதிய உயர்வு இல்லை. இருப்பினும், இந்த ஆண்டு அவர்களுக்கு சில நல்ல செய்திகள் வந்துள்ளன.  இந்திய நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு சராசரியாக 7.3% சம்பள உயர்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எதிர்பார்த்ததை விட சிறந்த வகையில் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், நிறுவனங்கள் தங்கள்  ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க திட்டமிட்டுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

கடந்த ஆண்டை விட சம்பளம் அதிகரிக்கும்

டெலோயிட் டூச் தோமட்சு இந்தியா எல்.எல்.பி (Deloitte Touche Tohmatsu India LLP - DTTILLP) நடத்திய ஆய்வில், இந்த ஆண்டு, இந்தியாவில் சராசரி சம்பள உயர்வு 2020 இன் 4.4 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும், ஆனால் இது 2019 ஆண்டு வழங்கப்பட்ட 8.6% சம்பள உயர்வைக் காட்டிலும் குறைவாக இருக்கும் என்று கூறுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற 92% நிறுவனங்கள் இந்த ஆண்டு தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதாக ஆய்வு கூறியது, 60% நிறுவனங்கள் கடந்த ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படும் என உறுதியளித்திருந்தன. 

400 நிறுவனங்கள் இந்த ஆய்வில் பங்கேற்றன
இந்த ஆய்வு 2020 டிசம்பரில் தொடங்கியது, இதில் 7 துறைகள், அதனுடன் தொடர்புடைய 25 துறைகளை சேர்ந்த 400 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் கடந்த ஆண்டு 4.4% என்ற அளவில் சம்பள உயர்வு அளித்தது. அதனுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சராசரி சம்பளம் 7.3% அதிகரிக்கும். இது 2019 இல் செய்யப்பட்ட 8.6% சம்பள உயர்வை விட குறைவு.

COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு, நிறுவனங்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதன் காரணமாக நிறுவனங்கள் தங்கள் இலாபத்தை அதிகரிக்கும் வாய்ப்பைப் பார்க்கின்றன என்று ஆய்வு கூறுகிறது. இந்த ஆண்டு 20% நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை இரட்டை இலக்கத்தில் அதிகரிக்கப் போகின்றன, கடந்த ஆண்டு 12% நிறுவனங்கள் மட்டுமே அவ்வாறு செய்தன. 

இந்த துறைகளில் மிக அதிக சம்பள உயர்வைக் காணும்

2020 ஆம் ஆண்டில் சம்பள உயர்வு வழங்காத நிறுவனங்களில், 30% மட்டுமே கடந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு அல்லது போனஸ் மூலம் தங்கள் ஊழியர்களுக்கு ஈடுசெய்யும் என ஆய்வு தெரிவிக்கிறது.  லைஃப் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) துறைகள் அதிக சம்பள உயர்வுகளை வழங்கும் எனவும் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த துறைகள் மிகக் குறைந்த அளவில் தான் சம்பள் உயர்வு இருக்கும் 

உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் குறைந்த பட்ச சம்பள உயர்வு காணப்படும்.  இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் துறை நிறுவனங்கள் மட்டுமே தங்கள் ஊழியர்களுக்கு இரட்டை இலக்கத்தைக் சம்பள உயர்வை கொடுக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. ஹாஸ்பிடாலிடி, ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவில் தான் சம்பள உயர்வை கொடுக்க உள்ளன.

ALSO READ | அரசு ஊழியர்கள் மின்- வாகனத்தை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்: Nitin Gadkari

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News