Tesla Car in India: டெஸ்லா கார்கள் எப்போதும் இந்தியாவிற்கு வரும் என்று காத்து கொண்டு இருக்கும் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. டெஸ்லாவின் EV கார்களை ஓட்ட காத்து கொண்டிருந்த இந்தியர்களின் கனவு நனவாக உள்ளது. ஆம், இந்தியாவிற்குள் விரைவில் டெஸ்லா கார்கள் வரவுள்ளன. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இந்தியாவிற்கு வருகை தந்து பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் இந்தியாவில் முதலீடு மற்றும் டெஸ்லாவின் புதிய தொழிற்சாலைகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் டெஸ்லா கார்கள் வரும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா? அப்போ ‘இதில்’ முதலீடு செய்யுங்கள்..
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, எலான் மஸ்க் ஏப்ரல் 22ம் தேதி இந்தியா வரவுள்ளார். இது குறித்த அறிவிப்பை X தளத்தில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க். இது எலான் மஸ்கின் முதல் இந்தியா வருகையாகும். புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருக்கும் இந்தியாவில் டெஸ்லாவின் முதலீடு மற்றும் எலக்ட்ரிக் கார் ஆலைக்கான திட்டங்கள் பற்றி இறுதி முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியாவில் டெஸ்லாவை அறிமுகப்படுத்துவது குறித்து முக்கிய அப்டேட்டை மஸ்க் வெளியிடலாம் என்று நம்பப்படுகிறது.
Looking forward to meeting with Prime Minister @NarendraModi in India!
— Elon Musk (@elonmusk) April 10, 2024
இந்தியாவிற்குள் டெஸ்லா கார்களை கொண்டுவர எலான் மஸ்க் நீண்ட ஆண்டுகளாக காத்து கொண்டு இருக்கிறார். ஆனால், அவரது நிபந்தனைகளை ஏற்க இந்திய அரசு மறுத்துவிட்டது. எலான் மஸ்க் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரியை குறைக்கும்படி இந்திய அரசிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் மஸ்கின் இந்த நிபந்தனைகளை இந்தியா தெளிவாக மறுத்துவிட்டது. அதன் பிறகு, டெஸ்லாவிற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே பல சந்திப்புகள் நடைபெற்றது. இந்நிலையில், நீண்ட நாட்கள் காத்திருந்ததற்கு நல்ல முடிவு வரவுள்ளது. டெஸ்லா அதிகாரிகள் இந்தியாவில் தொழிற்சாலைக்கான சரியான இடத்தைத் தேடிக்கொண்டு உள்ளனர்.
மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இடம் தேடுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்க 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளது டெஸ்லா நிறுவனம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க்கில் பிரதமர் மோடியை மஸ்க் சந்தித்தார். டெஸ்லா கார்களுக்கு இறக்குமதி வரியில் சலுகை அளிக்க வேண்டும் என மஸ்க் கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், இந்த கோரிக்கையை இந்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. இந்திய அரசு சமீபத்தில் ஒரு புதிய EV கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய EV கொள்கையின்படி, கார்களுக்கான இறக்குமதி வரி 15ல் இருந்து 100 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் குறைந்தபட்சம் 500 மில்லியன் டாலர் முதலீட்டில் இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரிச் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு.. “கைது செய்தது சரி தான்” டெல்லி உயர் நீதிமன்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ