காரில் செல்வது எவ்வளவுதான் ஆடம்பரமான மற்றும் சொகுசான ஒன்றாக இருந்தாலும் பைக்கில் பந்தாவாக போவது தான் சுவாரஸ்யமாக இருக்கும். அதிலும் அடிக்கடி காரில் பயணிப்பது என்பது கடினமானது, இருசக்கர வாகனங்களில் பயணிப்பது சற்று எளிதானது. அதிலும் குறிப்பாக இந்திய சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்வது பலருக்கும் விருப்பமான ஒன்றாக இருக்கிறது. காரின் விலையும் அதிகமாக இருப்பதால் பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். சிலர் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை வாங்க விரும்புகின்றனர், ஆனால் அதனை வாங்க அவர்களிடம் போதுமான கையிருப்பு இல்லாத காரணத்தினால் வங்கிகளில் கடன்களை பெற முயல்கின்றனர். தற்போது நீங்கள் இருசக்கர வாகனங்களுக்கு கடன்களை பெற அலைந்து திரிய வேண்டியதில்லை, எளிதாக ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி வாகன கடன்களை பெற்றுக்கொள்ள முடியும்.
IndusInd வங்கியானது தொற்றுநோய் காலத்திற்கு பின்னர் வாடிக்கையாளர்களுக்கு எளிய வசதி வழங்கும் விதமாக ஆன்லைன் மூலமாக வாகன கடன்களை வழங்குகிறது. மேலும் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இரு சக்கர வாகனக் கடன்களை வழங்குவதால், நீங்கள் முதலில் ஒரு விற்பனையாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வட்டி விகிதங்கள், விண்ணப்ப செயல்முறையின் எளிமை, வழங்குவதற்கான நேரம் போன்றவற்றில் ஒவ்வொரு விற்பனையாளர்களையும் ஒருவருடன் ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கவும். அதனைத்தொடர்ந்து நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள விற்பனையாளரின் இணையதளத்திற்குச் சென்று இரு சக்கர வாகனக் கடனுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படியில் 4% அதிகரிப்பு, ஊதியத்தின் முழு கணக்கீடு இதோ
அதற்கு நீங்கள் சான்றுகளாக அடையாளச் சான்றுகள், வருமானச் சான்றுகள் போன்ற தகவல்களை நீங்கள் கொடுக்க வேண்டும். அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் கடன் வாங்க விரும்பும் காலம் மற்றும் கடன் தொகையை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் வசதிக்கேற்ப எவ்வளவு காலத்தில் கடனை திருப்பி செலுத்த முடியுமோ அந்த கால அளவையே நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதிக வட்டிக்கு கடன்களை வாங்கிவிடாதீர்கள் அது நீங்கள் இஎம்ஐ செலுத்தும்போது உங்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறிவிடக்கூடும். இவை அனைத்தையும் தேர்ந்தெடுத்த பிறகு விற்பனையாளர் உங்கள் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து கடன் வழங்க நீங்கள் தகுதியானவர்களை என்பதை தரம் பார்த்து அவர்கள் உங்களுக்கு இரு சக்கர வாகனக் கடனை எந்த நேரத்திலும் அங்கீகரிக்கலாம்.
மேலும் படிக்க | ரயில் தட்கல் டிக்கெட்கள் உடனே கன்பார்ம் ஆக இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ