புதுடெல்லி: ஒரு நாட்டில் தண்ணீரை விட பெட்ரோல் மலிவாக இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம் என்று நினைத்து மகிழ்ச்சியடைவதற்குள், சார்க் (SAARC) நாடுகளில் இந்தியாவில் தான் பெட்ரோல் விலை அதிகம் என்பது வருத்தமாகத் தான் இருக்கும்.
ஒரு லிட்டர் தண்ணீர் (Water) பாட்டிலுக்கு செலுத்துவதைவிட பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க குறைவாக பணம் செலுத்த வேண்டிய நாடுகள் பல உள்ளன. ஆனால், இந்தியாவிலோ பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், சில நாடுகளில் அவை தண்ணீரை விட குறைவான விலையில் விற்கப்படுகின்றன.
ராஜஸ்தானின் (Rajastan) ஸ்ரீகங்கநகரில் பெட்ரோல் இப்போது நூறு ரூபாயை நெருங்கிவிட்டது. இங்கு பெட்ரோல் 95 ரூபாய் 50 காசுகளுக்கும், டீசல் 87 ரூபாய் 46 காசுக்கும் விறகப்படுகிறது. தண்ணீரை விட பெட்ரோல் மலிவாக விற்கும் நாடுகளைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.
Also Read | குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக சுரிநாம் அதிபர் கலந்து கொள்கிறார்
உலகில் பல நாடுகள் உள்ளன, அங்கு நீங்கள் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் வாங்க ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு குறைவாகவே செலுத்த வேண்டியிருக்கும். வெனிசுலா, ஈரான் மற்றும் அங்கோலாவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்படுகிறது. வெனிசுலாவில் பெட்ரோல் விலை ஜனவரி 4 அன்று லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 46 காசுக்கு விற்கப்படுகிறது. அதே நாளில், ஈரானில் பெட்ரோல் விலை 4 ரூபாய் 24 காசுகள் ஆகவும், அங்கோலாவில் 17 ரூபாய் 88 காசுகளாகவும் விற்பனை ஆனது.
இந்த நாடுகளில் பெட்ரோல் விலை அதிகம்
குளோபல் பெட்ரோல் டீசல் பிரைஸ்.காம் (Global Petrol Diesel Price.com) இணையதளத்தில் கிடைக்கும் தரவுகளின்படி, பெட்ரோல் ஹாங்காங்கில் லிட்டருக்கு 169 ரூபாய் 21 காசுகள், மத்திய ஆqபிரிக்க குடியரசில் 150 ரூபாய் 29 காசுகள் சிரியாவில் ரூ .149.08, நெதர்லாந்தில் ரூ .140.90. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நார்வேயில் 135.38 ரூபாய், பின்லாந்தில் 133.90 ரூபாய், இங்கிலாந்தில் 116 ரூபாய், சுவிட்சர்லாந்தில் ரூ .115, ஜெர்மனியில் ரூ .116, ஜப்பானில் ரூ .93.62, ஆஸ்திரேலியாவில் ரூ .68.91, அமெரிக்காவில் ரூ .50.13, ரஷ்யாவில் 42.69. இது தான் உலக நாடுகளில் பெட்ரோலின் விலை.
Also Read | சரித்திரத்தில் ஜனவரி 10ஆம் நாள் பதிவு செய்திருக்கும் நிகழ்வுகள்
சார்க் நாடுகளிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் விலை மிகவும் அதிகம். இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 95 ரூபாய்க்கும் அதிகம். அண்டை நாடுகளை விட இந்தியாவில் விலை அதிகம் என்பது தெரியுமா? சீனாவில் பெட்ரோல் விலை ரூ .72.62, நேபாளத்தில் ரூ .67.41, ஆப்கானிஸ்தானில் ரூ .36.34, பர்மாவில் ரூ .43.53, பாகிஸ்தானில் ரூ .48.19, பூட்டானில் ரூ .49.56, இலங்கையில் ரூ .62.79..
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR