பணத்தை எடுக்க பரவலாக அனைவரும் பயன்படுத்துவது ஏடிஎம்மைத் தான். முன்பெல்லாம் கணக்கு வைத்துள்ள வங்கியில் தான் பணத்தை எடுக்க முடிந்தது. இப்போது, அந்த நிலை மாறி, எந்த வங்கியிலும் பணம் எடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
ஏடிஎம் (ATM) மூலம் பணத்தை எடுப்பது மிகவும் எளிதானது. வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று கொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் 24 மணி நேர சேவை கிடைக்கிறது. இதனால் பலர் ATM மூலம் தான் பணத்தை எடுப்பத்தையே விரும்புகின்றனர்.
ஆனல, சில சமயம் நாம் பணத்தை எடுக்கும் போது, பணம் வராது ஆனால், கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட பணம் கிடைத்தாத பரிவர்த்தனைகள் மூலம் கழிக்கப்பட்ட ஏடிஎம் பணத்தை திரும்பப் பெறுவது எப்படி என பல வாடிக்கையாளர்களுக்கு தெரிவதில்லை. சிலர் பதற்றம் அடைகிறார்கள். கவலை வேண்டாம். அப்பட்டிப்பட்ட சூழ்நிலையில் பணத்தை எளிதாக திரும்ப பெறாம்.
வாடிக்கையாளர் பணத்தை எடுக்க மற்றொரு வங்கியின் ஏடிஎம் (ATM) பயன்படுத்தும்போது இந்த குழப்பம் இன்னும் அதிகரிக்கிறது. அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று புரியவில்லை. இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை.
ALSO READ | Aadhaar Card பெற தேவையான ஆவணங்கள் இல்லையா.. கவலை வேண்டாம்..!!!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிகள் வாடிக்கையாளர்களை முழுமையாகப் பாதுகாக்கின்றன. இது குறித்து ரிசர்வ் வங்கி ஒரு வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது. பணத்தை உங்களது கணக்கு உள்ள வங்கியின் ஏடிஎம்-ல் இருந்து எடுத்தாலும் சரி அல்லது பிற வங்கியின் ஏடிஎம்மில் இருந்து எடுத்தாலும் சரி, டெபிட் கார்ட் எந்த வங்கியை சேர்ந்ததோ, அந்த வங்கியில் வாடிக்கையாளர் விரைவில் புகார் அளிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள், பணம் வராத அந்த குறிப்பிட்ட பரிவர்த்தனையின் தகவல் கொண்ட எஸ்எம்எஸ் (SMS ) செய்தியை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். புகார் அளிக்க வாடிக்கையாளர்கள் தங்களது அருகிலுள்ள கிளைக்குச் செல்ல வேண்டும். இதற்குப் பிறகு, வங்கி அதிகாரிகள் உங்கள் எஸ்எம்எஸ்ஸில் உள்ள பரிவர்த்தனை எண்ணை ஸ்கேன் செய்து என்ன பிரச்சனை என்பதை ஆராய்வார்கள். பரிவர்த்தனை தோல்வியுற்றது என்று அவர்கள் கண்டுபிடித்தவுடன், உங்கள் பணம் உங்கள் கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.
ALSO READ | 9.95 % வட்டி கிடைக்கும் தேசிய பென்ஷன் திட்டம் ...!!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR