யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface - UPI) பரிவர்த்தனைகள், முதன்முறையாக ஆகஸ்ட் மாதத்தில் 10 பில்லியனைத் தாண்டியதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India - NPCI) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. UPI என்பது இந்தியாவில் உள்ள அனைத்து சில்லறை கட்டண முறைகளையும் உள்ளடக்கிய NPCI அமைப்பினால் உருவாக்கப்பட்ட நிகழ்நேர கட்டண முறை ஆகும். கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என கூறப்படுகிறது. ஆகஸ்ட் 30 வரை, 135 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் UPI மூலம் மொத்தம் 10.24 பில்லியன் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் செய்யப்பட்டுள்ளன.
NPCI இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், "UPI வியக்கத்தக்க வகையில்10 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மூலம் சாதனைகளை முறியடித்துள்ளது. இந்த நம்பமுடியாத மைல்கலை எட்டிய சாதனையையும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் திறனையும் கொண்டாடுவதில் எங்களுடன் அனைவரும் இணையுங்கள் என கேட்டுக் கொள்கிறோம். இந்த வேகத்தைத் தொடர்ந்து கடைபிடித்து, UPI உடன் பரிவர்த்தனை செய்யும் விதத்தில் தொடர்ந்து புரட்சியை ஏற்படுத்துவோம்!," முன்னதாக Twitter என அழைக்கப்பட்ட X தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 30 அன்று UPI பரிவர்த்தனைகள் 10.24 பில்லியனாக இருந்தது. மதிப்பின் அடிப்படையில், X தளத்தில் NPCI பகிர்ந்துள்ள தரவுகளின்படி, பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.15,18,456.4 கோடியாக இருந்தது.ஜூலை மாதத்தில் UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 9.96 பில்லியனாக (996.4 கோடி) இருந்தது, இது ஜூன் மாதத்தில் 9.33 பில்லியனாக இருந்தது. மதிப்பு அடிப்படையில், பரிவர்த்தனைகள் மொத்தம் ரூ.15,33,645.20 கோடி. UPI (Unified Payment Interface) என்பது ஒரு உடனடி பணம் செலுத்தும் அமைப்பாகும், இது பயனர்கள் எந்த வங்கிக் கணக்கிற்கும் உடனடியாகப் பணத்தை மாற்ற அனுமதிக்கிறது.
மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு குட் நியூஸ், டிஏ ஹைக் எப்போது? வந்தது அப்டேட்
உலகின் பல நாடுகள், இப்போது இந்தியாவின் UPI தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்புகின்றன. இதனால், வெளிநாடுகளில் உள்ள வெளிநாட்டவர்கள் பெரிதும் பலன் அடைவார்கள். சமீபத்தில் UPI ஐ ஏற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டிய நாடுகளில் ஜப்பானும் இன்று. இந்தியாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள ‘யுபிஐ’பண பரிவர்த்தனை சேவையை தங்கள் நாடுகளிலும் பின்பற்ற 40க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்வமாக உள்ளன. இது தொடர்பாக, இந்தியாவுடன் அந்நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஆண்டு தொடக்கத்தில் கூறுகையில், இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், விரைவில் பண பரிவர்த்தனைகள் அளவை கடந்து விடும் என நிபுணர்கள் கருதுகின்றனர் என கூறினார். பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ் UPI-BHIM சேவை 2016 ஆண்டில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2016-17 பண மதிப்பிழப்பு (Demonitasation) நடவடிக்கையானது மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை பெரிய அளவில் பின்பற்றி பணத்தைப் பயன்படுத்தும் பழக்கத்தை கைவிட வழிவகுத்தது” என்று கூறினார்.
மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு லாட்டரி! டிஏ உயர்வு... இதோ அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ