Home Loan Interest Rate: சொந்த வீடு என்பது அனைவரின் கனவு. வீட்டை வாங்குவது என்பது வாழ்க்கையின் எடுக்கும் மிகப்பெரிய முடிவாகும். நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு வாங்கும் கனவு நனவாக, வீட்டுக் கடன் தான் கை கொடுக்கின்றன. வீட்டுக் கடன் என்பது அதிகத் தொகைக்கான நீண்ட காலக் கடனாகும். எனவே, வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன், வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), ஏப்ரல் 5ஆம் தேதி நடந்த அதன் பணவியல் கொள்கை மறுஆய்வுக் கூட்டத்தில், தொடர்ந்து ஏழாவது முறையாக வட்டி விகிதங்களில் மாற்றங்கள் ஏதும் செய்யாமல், நிலையானதாக வைத்திருந்தது. இம்முறையும் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றம் ஏதும் இல்லை என அறிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் முதல் 15 வங்கிகளின் வீட்டுக் கடனுக்கான வட்டி விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 75 லட்சம் வரையிலான 20 வருட வீட்டுக் கடனில் ஒவ்வொரு மாதமும் இவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று இங்கே கூறப்பட்டுள்ளது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (UBI)
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா குறைந்த விலையில் வீட்டுக் கடனை வழங்குகிறது. UBI வீட்டுக் கடனுக்கு 8.35 சதவீத வட்டி வசூலிக்கிறது. இதில், 20 வருட காலத்திற்கு வாங்கப்படும் 75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனிற்கான மாதாந்திர இஎம்ஐ ரூபாய் 63,900 ஆக இருக்கும்.
பேங்க் ஆஃப் பரோடா
பாங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி ஆகியவற்றில், வீட்டுக் கடன்கள் 8.4 சதவீதத்தில் கிடைக்கின்றன. இதில், 20 வருட காலத்திற்கு வாங்கப்படும் 75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனிற்கான மாதாந்திர இஎம்ஐ ரூபாய் 64,200 ஆக இருக்கும்.
கனரா வங்கி
கனரா வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 8.5 சதவீதத்தில் வீட்டுக் கடனை வழங்குகிறது. இதில், 20 வருட காலத்திற்கு வாங்கப்படும் 75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனிற்கான மாதாந்திர EMI ரூபாய் 64,650 ஆக இருக்கும்.
கோடக் மஹிந்திரா வங்கி
கோடக் மஹிந்திரா வங்கி வீட்டுக் கடனுக்கு 8.7 சதவீத வட்டி வசூலிக்கிறது. இதில், 20 வருட காலத்திற்கு வாங்கப்படும் 75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனிற்கான மாதாந்திர இஎம்ஐ ரூ.64,550 ஆக இருக்கும்.
ஆக்சிஸ் வங்கி
தனியார் துறை வங்கிகளில் ஆக்சிஸ் வங்கி குறைந்த வட்டியில் வீட்டுக் கடனை வழங்குகிறது. இதில், 20 வருட காலத்திற்கு வாங்கப்படும் 75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனிற்கான மாதாந்திர EMI ரூபாய் 65,7750 ஆக இருக்கும்.
மேலும் படிக்க | சட்டவிரோத கடன் செயலிகளுக்கு ஆப்பு வைக்கும் ஆர்பிஐ! புதிய நடைமுறை விரைவில்
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடனுக்கு 9 சதவீத வட்டி வசூலிக்கிறது. இதில், 20 வருட காலத்திற்கு வாங்கப்படும் 75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனிற்கான மாதாந்திர இஎம்ஐ ரூ.66,975 ஆக இருக்கும்.
பாரத ஸ்டேட் வங்கி
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக் கடனுக்கு 9.15 சதவீத வட்டி வசூலிக்கிறது. இதில், 20 வருட காலத்திற்கு வாங்கப்படும் 75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனிற்கான மாதாந்திர இஎம்ஐ ரூ.67,725 ஆக இருக்கும்.
HDFC வங்கி
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வீட்டுக் கடனுக்கு 9.4 சதவீத வட்டி வசூலிக்கிறது. இதில், 20 வருட காலத்திற்கு வாங்கப்படும் 75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனிற்கான மாதாந்திர இஎம்ஐ ரூபாய் 68,850 ஆக இருக்கும்.
யெஸ் வங்கி
யெஸ் வங்கி வீட்டுக் கடனுக்கு 9.4 சதவீத வட்டி வசூலிக்கிறது. இதில், 20 வருட காலத்திற்கு வாங்கப்படும் 75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனிற்கான மாதாந்திர இஎம்ஐ ரூபாய் 68,850 ஆக இருக்கும்.
மேலும் படிக்க | இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா? அப்போ ‘இதில்’ முதலீடு செய்யுங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ