மத்திய அரசு விரைவில் அதன் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு பெரிய பரிசை வழங்கப்போகிறது, அதாவது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களின் டிஏ அதிகரிப்பு குறித்தும் அரசு விரைவில் முடிவு எடுக்கப்படஉள்ளது, தற்போது பணவீக்க மதிப்பு ஏழு சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதேசமயம் பணவீக்க விகிதம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கை விட இன்னும் அதிகமாகவே உள்ளது, இந்நிலையில் மத்திய அரசு அதன் ஊழியர்களின் அகவிலைப்படியை விரைவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து இதுவரை அரசு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை, அதேசமயம் எட்டாவது ஊதியக் குழுவைக் கொண்டு வருவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அரசு ஊழியர்களின் சம்பள கட்டமைப்பின் ஒரு பகுதியாகவுள்ள டிஏ-வை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அரசாங்கம் மாற்றியமைக்கிறது. அரசாங்கம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் டிஏவை உயர்த்திய பிறகு 3% டிஏ அதிகரித்தது. தற்போது அகவிலைப்படி மாற்றம் செய்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில் அரசாங்கம் ஊழியர்களது சம்பளத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க | EPFO new rules: PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி!
ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.71 சதவீதமாக குறைந்துள்ளது, ஜூன் மாதத்தில் இது 7.01 சதவீதமாக இருந்தது. அரசாங்கம் 4 சதவிகிதம் டிஏ-வை அதிகரிக்கலாம். பணவீக்க விகிதம் 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தபோது, டிஏ 5 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது மத்திய பணியாளர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. 4 சதவீதம் அகவிலைப்படியை அரசு உயர்த்தினால், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள். இதன்படி, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 18,000 எனில், அவருடைய அகவிலைப்படி 34 சதவீதத்தின்படி ரூ.6,120 ஆகும். டிஏ 38 சதவீதமாக இருந்தால், பணியாளருக்கு ரூ.6,840 அகவிலைப்படி கிடைக்கும், இதன் மூலம் ஆண்டு சம்பளமாக ரூ.8,640 கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ