2025 புத்தாண்டு தொடக்கத்தில் குழந்தைகளுடன் இப்படி நாளை செலவிடுங்க.. பசங்க ஜாலியா இருப்பாங்க!

பெற்றோர்கள் புத்தாண்டில் உங்கள் குழந்தைகளை அவர்களுக்குப் பிடித்த இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கான மகிழ்ச்சி நேரத்தைச் செலவிடுங்கள். ஒவ்வொரு பெற்றோர்களும் குழந்தைகளிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தை அவர்கள் வாழ்க்கைக்கு உதவியாக இருக்க வேண்டும். 

 

பெற்றோர்கள் புத்தாண்டை தங்கள் குழந்தைகளுடன் அன்பான நேரத்தைச் செலவிட்டு ஒற்றுமையுடன் மகிழ்ச்சியையும் நிறையச் செய்து கொண்டாடுங்கள். புத்தாண்டு என்பது குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி, திறமை, மற்றும் பொறுப்பு இவற்றை இந்த உலகிற்கு எப்படிச் சரியான முறையில் கொடுக்க வேண்டும் என்று உலகத்தைப் பற்றி அன்புடன் எடுத்துச் சொல்லுங்கள்.

1 /8

குடும்ப விளையாட்டு: குடும்பத்தில் பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளுடன் விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒன்றாகக் கண்டு ரசித்து நாளை கொண்டாடுங்கள். 

2 /8

பொழுதுபோக்கு சுற்றுலா: அருகில் இருக்கும் மால் அல்லது கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்களின் சந்தோஷத்தில் இன்பம் காணுங்கள்.

3 /8

கோவில்: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கோவிலுக்கு அழைத்துச் சென்று இறைவனின் அருளைப் பெற்று வருடத்தை இன்பாய் தொடங்குங்கள்.

4 /8

கதை சொல்லுதல்: பெற்றோர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தின் நினைவுகளைக் குழந்தைகளிடம் பகிர்ந்து குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்தீர்கள் என்று அவர்களிடம் கூறி உங்கள் குழந்தைப் பருவத்தைச் செலவிடுங்கள்.  

5 /8

உறவினர்கள் சந்திப்பு:குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் சந்தித்து அன்பான நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிடுங்கள்.

6 /8

கருனை செயல்: புத்தாண்டு நாளில் குழந்தைகளிடம் நல்ல செயல்களை கற்றுக் கொடுங்கள். இனிய ஆண்டு தொடக்கத்தில் ஏழைகளுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு ஏதாவது ஒரு உதவி அன்று செய்யுங்கள்.  

7 /8

புத்தாண்டு தொடக்கத்தில் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கம் பண்புகளை கற்றுக் கொடுத்து அதனுடன் அவர்களுக்குப் பிடித்த பரிசுப் பொருட்களைப் புத்தாண்டு நினைவாகக் கொடுங்கள்.  

8 /8

பிடித்த காலை உணவு: புத்தாண்டு தொடக்கத்தில் குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளை வீட்டில் சமைத்துக்கொடுத்து அன்பாக உரையாடி அன்றைய நாளை இன்பாய் பயணம் செய்யுங்கள்.