Budget 2024: ஜூலை 23 ஆம் தேதி நிதியமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இது என்பதால் இது குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
குறிப்பாக சாமானியர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களை மகிழ்விக்கும் வகையில் வரி விதிப்பில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) வரி செலுத்துவோர்க்கு இந்த பட்ஜெட்டில் பல பரிசுகளை வழங்குவார் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். நீண்ட நாட்களாக அவர்களுக்கு இருந்த பல கோரிக்கைகள் இப்பொழுது நிறைவேற்றப்படும் என்றும் நம்பப்படுகின்றது. எனினும் இது தொடர்பான சில சந்தேகங்களும் உள்ளன. நிதி அமைச்சர் அளிக்கப் போகும் சலுகைகள் பழைய வரி வுதிப்பு முறையில் கிடைக்குமா அல்லது புதிய வரி விதிப்பு முறையில் கிடைக்குமா என்ற கேள்வி உள்ளது. பெரும்பாலான வரி செலுத்துவோர் (Taxpayers) இன்னும் பழைய வரிவிதிப்பு முறையையே தேர்வு செய்து வருவதால், புதிய வரி முறையை பிரபலமாக்க அதில் பல புதிய சலுகைகள் அளிக்கப்படக்கூடும் என்ற கருத்தும் உள்ளது.
நிதியமைச்சரிடம் வரி விதிப்பில் எதிர்பார்க்கப்படும் முக்கிய மாற்றங்கள் என்ன?
இந்த முறை அடிப்படை வரி விலக்கு வரம்பு (Basic Tax exemption limit) 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது. இது நடந்தால் பல வரி செலுத்துவோருக்கு நிவாரணம் கிடைக்கும். வரிக் கொள்கையில் பல மாற்றங்க்களைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவற்றின் அடிப்படையில் இந்த ஆண்டின் பட்ஜெட் மீதான சுவாரசியமும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
அடிப்படை வரி விலக்கு வரம்பு என்றால் என்ன?
அடிப்படை வரிவிலக்கு வரம்பிற்குள் வருவாய் ஈட்டும் நபர்கள் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. தற்போதுள்ள வரிவிதிப்பு முறைகளின் படி பழைய வரி முறையில் (Old Tax Regime) இந்த வரம்பு 2.5 லட்சம் ரூபாயாக உள்ளது. புதிய வரி விதிப்பு முறையில் (New Tax Regime) இது 3 லட்சம் ரூபாயாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறைகளில் இந்த வரம்பை 5 லட்சம் ரூபாயாக அரசாங்கம் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வரம்பு அதிகரிக்கப்பட்டால் பழைய வரிவிதிப்பு முறையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். ஏனெனில், இந்த வரி முறையில் ஏற்கனவே பலவித விலக்குகள் அளிக்கப்படுகின்றன.
யாருக்கு அதிக நன்மை கிடைக்கும்
அடிப்படை வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படுவதால் வரி செலுத்துவோருக்கு அதிக நன்மை கிடைக்கும். இதனால் வரிக்கு உட்பட்ட அவர்களது வருமானம் குறையும். பழைய வரி முறையை தேர்ந்தெடுத்திருப்பவர்களுக்கு விலக்குகளும் வரி சலுகைகளும் கிடைக்கின்றன. இந்த வகையில் கையில் வரும் சம்பளத்தின் அளவு அதிகரிக்கும். இதன் மூலம் முதலீடுகள் மற்றும் செலவுகளில் அதிக விலக்கு பெற முடியும்.
அடிப்படை விலக்கு வரம்பை அதிகரிப்பதால் என்ன நடக்கும்?
தனிப்பட்ட வரி விலக்கு வரம்பை அதிகரித்து 5 லட்சம் ஆக்குவதால் நடுத்தர வர்க்க மக்களுக்கு கையில் கிடைக்கும் வருமானத்தின் அளவு அதிகமாகும். இதனால் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அடிப்படை வரம்பை ஐந்து லட்சமாக அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக பர்சனல் ஃபைனான்ஸ் நிபுணர் பங்கஜ் மெட்பால் தெரிவிக்கிறார்.
விலைவாசியை சமாளிப்பது எளிதாகும்
அடிப்படை வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படுவதால் விலைவாசியை எளிதாக சமாளிக்க சாமானிய மக்களுக்கு உதவி கிடைக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் மற்றும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசியின் காரணமாக நடுத்தர வர்க்க மக்களின் வருவாயும் சேமிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த வரம்பு அதிகரிக்கப்படுவது சரியாக இருக்கும். இதனால் அரசாங்கத்தின் வரி வசூலிலும் எந்த தாக்கமும் இருக்காது என்றே நிபுணர்கள் கருதுகிறார்கள். நேரடி வரி வசூலின் பெரும் பங்கு மிக அதிக வருவாய் கொண்ட வரி செலுத்துவோரிடமிருந்துதான் வருகிறது என்பது இதற்கு ஒரு காரணமாகும்
2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு வரி விலக்கு வரம்பு மாற்றப்படவில்லை
மோடி அரசாங்கத்தின் முதல் ஆட்சி காலம் 2014 ஆம் ஆண்டு துவங்கியது. அப்போது ஆட்சிக்கு வந்த உடனேயே அரசாங்கம் வரி செலுத்துவோர்க்கு பெரிய நிவாரணத்தை அளித்தது. அடிப்படை வரி விலக்கு வரம்பு 2 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு பத்து ஆண்டுகளாக வரி அடுக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும் இந்த ஆண்டு இந்த நிவாரணத்தை அரசு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ