Budget 2024: சம்பள வர்க்கத்திற்கு நிதி அமைச்சரின் குட் நியூஸ்... இந்த வரம்பு அதிகரிக்கலாம்

Budget 2024: பட்ஜெட்டுக்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ளன. இந்த முறை நிதி அமைச்சர் தங்களுக்காக என்ன அறிவிப்பை வெளியிடுவார் என அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 4, 2024, 10:30 AM IST
  • அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  • நேரடி வரி வசூலில் ஏற்றம்
  • நிலையான விலக்கு வரம்பு அதிகரிக்குமா?
Budget 2024: சம்பள வர்க்கத்திற்கு நிதி அமைச்சரின் குட் நியூஸ்... இந்த வரம்பு அதிகரிக்கலாம் title=

Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பிப்ரவரி 1 ஆம் தேதி நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆனால், இது தேர்தல் ஆண்டு என்பதால் இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தல் ஆண்டில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைக்கப்படும் புதிய அரசாங்கம் முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறது. இது வழக்கமாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படுகிறது. எனினும் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவர அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

பட்ஜெட்டுக்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ளன. இந்த முறை நிதி அமைச்சர் தங்களுக்காக என்ன அறிவிப்பை வெளியிடுவார் என அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இதில் அலுவலக பணிகளில் இருக்கும் சம்பள வர்க்கத்தினரும் (Salaried Class) அடங்குவர். தங்களுக்கு இந்த முறை வரிச்சலுகை கிடைக்கும் என இவர்கள் நம்புகிறார்கள். 

கடந்த 10 வருடங்களில் நடக்காதது இந்த ஆண்டு நடக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில், நாட்டின் வளர்ச்சி சரியான பாதையில் உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் வரி செலுத்துவோரின் (Taxpayers) பங்கு மிகப் பெரியது. மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டுமானால், அதற்கு அரசு கண்டிப்பாக வரி செலுத்துவோரை மகிழ்விக்க வேண்டும்.

நேரடி வரி வசூலில் ஏற்றம் (Hike in Direct Tax Collection)

அரசின் நேரடி வரி வசூல் சிறப்பாக இருந்துள்ளது. வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2023-24 நிதியாண்டில் டிசம்பர் 17, 2023 வரை நேரடி வரி வசூல் 17.01% அதிகரித்துள்ளது. நிகர நேரடி வரி வசூலிலும் 20.66% அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியும் (Reserve Bank of India) வரும் மாதங்களுக்கான எச்சரிக்கயை விடுத்துள்ளது. வளர்ச்சி நன்றாக உள்ளது. ஆனால் 8 சதவீதத்திற்கு மேலான வளர்ச்சிக்கு, வரி செலுத்துவோர் கையில் அதிக பணம் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தச் சூழ்நிலைகள் அனைத்தும் வரி விஷயங்களில் கொஞ்சம் நிவாரணம் தேவை என்பதைக் காட்டுகின்றன.

மேலும் படிக்க | Higher Pension: பிஎஃப் சந்தாதாரர்களுக்கு EPFO அளித்த பரிசு, காலக்கெடு நீட்டிக்கப்பட்டது

நிலையான விலக்கு வரம்பு அதிகரிக்கலாம் (Increase in Standard Deduction Limit)

வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ​​அரசாங்கம் நிலையான விலக்கு (Standard Deduction) வரம்பை அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நிலையான விலக்கு ரூ.50,000 ஆக உள்ளது. இதை 1 லட்சமாக உயர்த்த வேண்டும் என கே.பி.எம்.ஜி. (KPMG) கோரிக்கை விடுத்துள்ளது. பயணம், அச்சிடுதல், எழுதுபொருட்கள், புத்தகங்கள், ஊழியர்களின் சம்பளம், வாகன ஓட்டம், பராமரிப்பு, மொபைல் செலவுகள் போன்ற செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஊழியர்களின் உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்தச் செலவுகள் அனைத்தையும் சந்திக்க ரூ.50,000 ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் போதாது. பணவீக்கம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, நிலையான விலக்கு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் வந்த வண்ணம்  உள்ளன.

அசோசெம் அமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளது

50,000 ரூபாய் கழிப்பது சம்பளம் பெறும் வகுப்பினருக்கு பெரிய நிவாரணம் அல்ல என்று ASSOCHAM கூறியுள்ளது. வரி செலுத்தும் அனைவரது சம்பளமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எனவே அதிக எண்ணிக்கையிலான வரி செலுத்துவோருக்கு இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை. இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் (ICAI) பணவீக்க குறியீட்டு சரிசெய்தலின் அடிப்படையில் நிலையான விலக்கு இருக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

Union Budget 2024: நிலையான விலக்கு வரம்பு அதிகரிக்குமா? 

வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில். அரசாங்கம் நிலையான விலக்கு வரம்பை அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அதன் வரம்பு ரூ.50000 ஆக உள்ளது. அதை மத்திய அரசு (Central Government) அதிகரிக்கக்கூடும். இது 1 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று தனிப்பட்ட நிதி நிபுணர்களும் கருதுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், பட்ஜெட்டில் (Budget 2024) அரசாங்கம் இதற்கான நிவாரணத்தை வழங்கக்கூடும். பட்ஜெட்டில், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நிலையான விலக்கு வரம்பு தற்போதைய ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்படலாம் என்று வட்டாரங்கள் நம்புகின்றன.

மேலும் படிக்க | SIP Investment Calculator: 5000 ரூபாயை 20 லட்சம் ரூபாயாக மாற்றும் சூத்திரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News