ஆகஸ்ட் மாதத்தில் வங்கி வேலை இருக்கா? வங்கி விடுமுறை நாட்களின் முழு லிஸ்ட் இதோ

Bank Holidays in July: ஒவ்வொரு மாதமும் போலவே இம்முறையும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் முன் வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 31, 2024, 12:41 PM IST
  • 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறைகளின் பட்டியலை இங்கே காணலாம்.
  • வங்கிகள் மூடப்பட்டிருக்கும் போது அவசியமான பணிகளை எப்படி செய்வது?
ஆகஸ்ட் மாதத்தில் வங்கி வேலை இருக்கா? வங்கி விடுமுறை நாட்களின் முழு லிஸ்ட் இதோ title=

Bank Holidays in July: அடிக்கடி வங்கித் தொடர்பான பணிகளுக்காக வங்கிக்கு செல்லும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். நாளை அதாவது ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் புதிய மாதம் தொடங்குகிறது. ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படும், எந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் போலவே இம்முறையும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் முன் வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வெளியிட்டுள்ளது. ஜூலை மாதத்தைப் போலவே, ஆகஸ்ட் மாதத்திலும் அதிக விடுமுறைகள் உள்ளன. ஆகையால், வங்கிக்கு செல்ல வேண்டிய முக்கிய பணிகள் உங்களுக்கு இருந்தால், ஆர்பிஐ (RBI) வெளியிட்டுள்ள ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியலை செக் செய்துகொள்வது நல்லது. 

13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் மட்டுமே வங்கிகளில் நம் பணிகளை செய்துகொள்ள முடியும். இந்த மாதம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ரக்ஷாபந்தன், கிருஷ்ண ஜெயந்தி, பல்வேறு ஆண்டுவிழாக்கள், திருவிழாக்கள் மற்றும் சனி-ஞாயிறு என மொத்தம் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதில், சில விடுமுறைகள் வெவ்வேறு மாநிலங்களுக்கு மாறுபடும், சில விடுமுறைகள் சில மாநிலங்களுக்கு மட்டுமே இருக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறைகளின் பட்டியலை இங்கே காணலாம்:

ஆகஸ்ட் 3- அகர்தலாவின் கேர் புஜாவிற்காக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 4- ஞாயிறு, வார விடுமுறை.
ஆகஸ்ட் 8- டெண்டாங் லோ ரம் ஃபாத், சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 10- மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 11- ஞாயிறு, வார விடுமுறை.
ஆகஸ்ட் 13- தேசபக்தர் தினம், மணிப்பூரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம், நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 18- ஞாயிறு, வார விடுமுறை.
ஆகஸ்ட் 19- ரக்ஷா பந்தன்/ஜூலானா பூர்ணிமா/பிர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் பிறந்த நாள், நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 20- ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி அன்று கொச்சி, திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 24 - மாதத்தின் நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 25- ஞாயிறு, வார விடுமுறை.
ஆகஸ்ட் 26- கிருஷ்ண ஜெயந்தி, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க | ITR Filing: இன்றே கடைசி நாள்.... நாளை முதல் ஐடிஆர் தாக்கல் செய்ய யாருக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல், நாடு முழுவதும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்டில் நாடு முழுவதும் குறிப்பிடப்பட்டுள்ள விடுமுறை நாட்களைத் தவிர, சில மாநிலங்களில் கூடுதல் விடுமுறைகளும் அளிக்கப்படுகின்றன. உங்கள் மாநில வங்கி விடுமுறை குறித்த துல்லியமான தகவலுக்கு நீங்கள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தையும் பார்வையிடலாம். ஒவ்வொரு மாதமும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். இது தவிர, நாட்டின் பெரும்பாலான வங்கிகள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். 

வங்கிகள் மூடப்பட்டிருக்கும் போது அவசியமான பணிகளை எப்படி செய்வது? 

வங்கி தொடர்பான பெரும்பாலான பணிகளை ஆன்லைனிலேயே செய்ய முடியும். இதை ரிசர்வ் வங்கியும் ஊக்குவிக்கிறது. இந்த பணிகளை முடிக்க நீங்கள் வங்கிக் கிளைக்கு செல்ல தேவையில்லை. இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் (Net Banking), மொபைல் பேங்கிங் (Mobile Banking) அல்லது வாட்ஸ்அப் வங்கி சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: இன்று வருகிறது முக்கிய AICPI எண் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News