வங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்:17% ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாள் வேலை, கூடுதல் விடுமுறைகள்.... ஒப்பந்தம் எட்டப்பட்டது!!

Bank Employees: அனைத்து சனிக்கிழமைகளையும் வார விடுமுறை தினமாக்கவும் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனம் கூறியுள்ளது. புதிய வேலை நேரம் குறித்த அரசின் அறிவிப்பு வந்தவுடன் அது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 9, 2024, 01:31 PM IST
  • 17% ஊதிய உயர்வு.
  • 5 நாள் வார வேலை.
  • பெண் ஊழியர்களுக்கு கூடுதல் சிக் லீவ்.
வங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்:17% ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாள் வேலை, கூடுதல் விடுமுறைகள்.... ஒப்பந்தம் எட்டப்பட்டது!! title=

Bank Employees: வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி உள்ளது. வங்கி ஊழியர்களின் ஊதியத்தை ஆண்டுதோறும் 17 சதவீதம் உயர்த்த இந்திய வங்கிகள் சங்கம் (Indian Banks Association) மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் (Staff Unions) வெள்ளிக்கிழமை ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன. இது வங்கி ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்துள்ளது. இதனால் பொதுத்துறை வங்கிகளுக்கு சுமார் ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 2022 முதல், 8 லட்சம் வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வால் ஆதாயம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அமைப்புகளுடன் கலந்தாலோசித்து ஆண்டு சம்பளத்தை IBA திருத்துகிறது.

மேலும், அனைத்து சனிக்கிழமைகளையும் வார விடுமுறை தினமாக்கவும் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும் அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனம் கூறியுள்ளது. புதிய வேலை நேரம் குறித்த அரசின் அறிவிப்பு வந்தவுடன் அது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8088 புள்ளிகளுடன் தொடர்புடைய அகவிலைப்படி மற்றும் கூடுதல் சுமைகளை இணைத்த பிறகு, புதிய ஊதிய விகிதங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ள நிலையில், ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய முக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்:

17% ஊதிய உயர்வு

ஐபிஏ, வங்கி ஊழியர் சங்க ஒப்பந்தத்திற்கு பிறகு PSU வங்கி ஊழியர்கள் (PSU Bank Employees) 17 சதவீதம் சம்பள உயர்வை (Salary Hike) பெறவுள்ளனர். சம்பள உயர்வு நவம்பர் 1, 2022 முதல் அமலுக்கு வரும். சிஏஐஐபி (சிஏஐஐபி பகுதி-II) முடித்த அதிகாரிகள் 01.11.2022 முதல் இரண்டு அதிகரிப்புகளுக்குத் தகுதிபெறுவார்கள் என்று, கூட்டுப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. 

5 நாள் வார வேலை 

அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை தினமாக, வாரத்தில் 5 வேலை நாட்களை (5 Day Working) அங்கீகரிக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், அரசின் அறிவிப்பிற்குப் பிறகு பணி நேரத்தை திருத்தும் திட்டம் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. 

அகவிலைப்படி இணைப்பு

ஐபிஏ, வங்கி ஊழியர் சங்க ஒப்பந்தத்திற்குப் பிறகு, PSU வங்கி ஊழியர்களுக்கு 8088 புள்ளிகளுக்கு இணையாக அகவிலைப்படி (Dearness Allowance)இணைக்கப்படும். " 8088 புள்ளிகளுடன் தொடர்புடைய அகவிலைப்படியையும், கூடுதல் சுமையையும் இணைத்த பிறகு, புதிய ஊதிய விகிதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன." என்று கூட்டு பிரகடனத்திக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | SCSS Interest Rates : சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அறிவித்தது அரசு.... அதிக வட்டி கிடைக்குமா?

பெண் ஊழியர்களுக்கு கூடுதல் சிக் லீவ்

புதிய ஊதிய தீர்வின் கீழ் அனைத்து பெண் ஊழியர்களும் மருத்துவச் சான்றிதழை வழங்காமல் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் சிக் லீவ் (Sick Leave)எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

எக்ஸ்-கிரேஷியா தொகை

அக்டோபர் 31, 2022 அன்று அல்லது அதற்கு முன் ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்ற ஓய்வுபெற்ற ஊழியர்கள், அந்தத் தேதியில் ஓய்வு பெற்றவர்கள் உட்பட அனைவரும், பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்துடன் மாதாந்திர கருணைத் தொகையைப் (Ex Gratia amount)பெறுவார்கள் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

ப்ரிவிலேஜ் லீவ்

ஒரு ஊழியர் ஓய்வு பெற்றாலோ அல்லது பணியில் இருக்கும்போது இறந்தாலோ, அவருக்கு இருக்கும் பிரிவிலேஜ் விடுமுறைக்கான (Privilage Leave) தொகை அதிகபட்சமாக 255 நாட்களுக்கு வழங்கப்படும். 

வங்கிகளின் அமைப்பான ஐபிஏவின் தலைமைச் செயல் அதிகாரி சுனில் மேத்தா, தனது சமூக ஊடக எக்ஸ் பதிவில், ‘வங்கித் துறைக்கு இன்று ஒரு முக்கியமான மைல்கல். IBA மற்றும் UFBU, AIBOU, AIBASM மற்றும் BKSM ஆகியவை வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான ஊதிய திருத்தம் தொடர்பான 9வது கூட்டுக் குறிப்பு மற்றும் 12வது இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன." என்று தெரிவித்தார். இது நவம்பர் 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அடிப்படை சம்பளத்துடன் DA இணைக்கப்படுமா? வெளியான தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News