SBI வாடிக்கையாளர்கள் உஷார்: இன்று முதல் KYC அவசியம், இல்லையெனில் கணக்கு செயல்படாது

வங்கி பரிவர்த்தனையை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில் KYC முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், கணக்கு வைத்திருப்பவர் தனது ஆதார் மற்றும் பான் அட்டையை வங்கிக்கு அனுப்ப வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 1, 2021, 01:40 PM IST
  • SBI தனது வாடிக்கையாளர்களுக்கு KYC செயல்முறையை கட்டாயமாக்கியுள்ளது.
  • இனி KYC இல்லாமல் SBI வாடிக்கையாளர்கள் கணக்கைப் பயன்படுத்த முடியாது.
  • KYC செய்யப்படாத கணக்குகளில் அரசாங்க நலத்திட்டங்களின் தொகை மாற்றப்படாது.
SBI வாடிக்கையாளர்கள் உஷார்: இன்று முதல் KYC அவசியம், இல்லையெனில் கணக்கு செயல்படாது title=

புதுடெல்லி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு KYC செயல்முறையை கட்டாயமாக்கியுள்ளது. அதாவது இனி KYC இல்லாமல் SBI வாடிக்கையாளர்கள் கணக்கைப் பயன்படுத்த முடியாது. KYC இல்லாத கணக்குகள் செயலிழக்கப்படும் என்று SBI தெளிவாகக் கூறியுள்ளது. நீங்கள் KYC செயல்முறையை இன்னும் செய்யவில்லை என்றால், KYC என்றால் என்ன, இதை எளிதாக செய்துமுடிக்கும் வழி என்ன என்பதை இங்கெ தெரிந்து கொள்ளுங்கள்.

KYC என்றால் என்ன

வங்கி பரிவர்த்தனையை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், கணக்கு வைத்திருப்பவர் தனது ஆதார் (Aadhaar) மற்றும் பான் அட்டையை வங்கிக்கு அனுப்ப வேண்டும். இந்த வேலையை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் செய்யலாம். வங்கியை மேலும் பாதுகாப்பாக மாற்றுவதற்காக, போலி நபர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.

KYC ஐ ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி

உங்கள் கணக்கு எந்த வங்கியில் இருந்தாலும், அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று இந்த வேலையை செய்து விடலாம். ‘Update Your KYC’ பிரிவிற்கு சென்று, உங்கள் பெயர் மற்றும் முகவரியின் சரியான தகவலை நீங்கள் கொடுக்க வேண்டும். மேலும் ஆதார்-பான் அட்டையின் நகலையும் பதிவேற்ற வேண்டும். வீட்டில் இருந்தபடியே, சில நிமிடங்களில் இந்த வேலையை மிக எளிதாக செய்துவிட முடியும். ஆகையால் இன்னும் நீங்கள் இந்த செயல்முறை செய்யவில்லை என்றால், தாமதிக்காமல் உடனடியாக KYC ஐ அப்டேட் செய்யவும்.

ALSO READ: SBI Cheap Loans: பல்வேறு கடன் வகைகளில் SBI அளிக்கும் அதிரடியான சலுகைகள் இதோ!!

ஆஃப்லைன் KYC செயல்முறை

வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கி கிளைக்கு சென்றும் இந்த வேலையை செய்து முடிக்கலாம். இதற்கு, நீங்கள் வங்கிக்குச் சென்று ஆதார் மற்றும் பான் அட்டையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணம் சரியாக இருந்தால், உங்கள் KYC புதுப்பிக்கப்படும். அதன் தகவல்கள் மொபைலில் செய்தி மூலமும் உங்களுக்கு வழங்கப்படும். இன்றைய காலகட்டத்தில், பாதுகாப்பான வங்கி செயல்முறைக்கு KYC மிகவும் முக்கியமானது.

அரசு திட்டத்திற்கு பலன் கிடைக்காது

உங்கள் கணக்கிற்கு KYC செய்து முடிக்கவில்லை என்றால், உங்களுக்கு பல இழப்புகளும் நேரிடக்கூடும். KYC செய்யப்படாத கணக்குகளில் அரசாங்க நலத்திட்டங்களின் தொகை மாற்றப்படாது. பிரதமர் கிசான் சம்மான் நிதியின் (PM Kisan) அடுத்த தவணையும் வரவுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். உங்கள் KYC ஐ நீங்கள் இன்னும் புதுப்பிக்கவில்லை என்றால், தாமதிக்காமல் உடனே அதை செய்யுங்கள். இதை செய்துவிட்டால், அரசாங்கத் திட்ட பணம் உங்கள் கணக்கில் நேரடியாக வந்தடையும். இது தவிர, உங்கள் வங்கி பரிவர்த்தனைகளும் பாதுகாப்பாக இருக்கும், எந்த பிரச்சனைகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்காது.

ALSO READ: SBI அளிக்கும் அதிரடி loan offer: கவர்ச்சிகர வட்டியில் தங்கக் கடன் பெறலாம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News