உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? அப்போ சுகன்யா சம்ரிதி திட்டம் உடனடியாக ஓபன் செய்யுங்கள்

சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) அல்லது செல்வமகள் சேமிப்பு திட்டம் என்பது சிறுமிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோதியால் ஜனவரி 22 தேதி 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 

Last Updated : Aug 28, 2020, 04:44 PM IST
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? அப்போ சுகன்யா சம்ரிதி திட்டம் உடனடியாக ஓபன் செய்யுங்கள் title=

சுகன்யா சம்ரிதி யோஜனா(SSY) அல்லது செல்வமகள் சேமிப்பு திட்டம் என்பது சிறுமிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோதியால் ஜனவரி 22 தேதி 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். 

ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 150000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். ஆண்டுக்கு 7.6 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரிவிலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வு தொகையை 21ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம். மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

 

ALSO READ | PPF, சுகன்யா சம்ரிதி திட்டம்: உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான சிறந்த திட்டம்

  • ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலிடு செய்யலாம்.
  • குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாப்பாளர் இக்கணக்கை தொடங்கலாம் .
  • குழந்தைக்கு 10 வயது வரை இந்த கணக்கினை தொடங்கலாம் .

சுகன்யா சமிர்தி கணக்கை எவ்வாறு திறப்பது?

  1. ஒரு கணக்கைத் திறக்க, நீங்கள் சுகன்யா சமிர்தி கணக்குத் திறக்கும் படிவத்தை பூர்த்தி செய்து அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளை அல்லது தபால் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  2. நீங்கள் மகளின் பிறப்புச் சான்றிதழ், பாதுகாவலர் அல்லது மகளின் பெற்றோர் முகவரி ஆதாரத்துடன் பாதுகாவலர் அல்லது மகளின் பெற்றோரின் முகவரி ஆதாரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
  3. சுகன்யா நினைவு கணக்கைத் திறக்க, நீங்கள் வைப்புத் தொகையையும் செலுத்த வேண்டும். நீங்கள் ரூ .250 முதல் 1.50 லட்சம் வரை எந்த தொகையையும் செலுத்தலாம்.
  4. உங்கள் கணக்கைத் திறந்த பிறகு, கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு பாஸ் புக் வழங்கப்படுகிறது. நீங்கள் வங்கி கிளையில் நிலையான வழிமுறைகளையும் அமைக்கலாம், அல்லது இணைய வங்கி மூலம் சுகன்யா சம்ரிதி கணக்கிற்கான தானியங்கி கடன் அமைக்கலாம்.

 

வங்கிகளின் பட்டியல்
செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்க அனுமதிபெற்ற இந்திய வங்கிகளின் பட்டியலை கீழே காணலாம்.


பாரத ஸ்டேட் வங்கி
ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா
ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானர் & ஜெய்ப்பூர்
ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர்
ஸ்டேட் பாங்க் ஆஃப் ஐதராபாத்
ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர்
அலகாபாத் வங்கி
ஆந்திரா வங்கி
ஆக்சிஸ் வங்கி
பேங்க் ஆப் பரோடா
பேங்க் ஆப் இந்தியா
பேங்க் ஆப் மகாராஷ்டிரா (BoM)
கனரா வங்கி
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
கார்ப்பரேஷன் வங்கி
தேனா வங்கி
ஐசிஐசிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி
இந்தியன் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்
பஞ்சாப் தேசிய வங்கி
பஞ்சாப் & சிந்து வங்கி
சிண்டிகேட் வங்கி
யூகோ வங்கி
இந்திய யூனியன் வங்கி
யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா
விஜயா வங்கி

இவ்வங்கிகள் மட்டுமின்றி இந்திய அஞ்சலகத்தின் அனைத்து கிளைகளிலும் இத்திட்டத்தை தொடங்கலாம். 

 

ALSO READ | அட சொன்னா நம்புங்க… 65 வயது பெண்மணிக்கு 14 மாதத்தில் எட்டு குழந்தைகள் பிறந்தது ..!!

Trending News