ஆதார் அட்டையில் நடக்கும் மோசடிகள்: இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை மிக முக்கியமான மற்றும் அத்தியாவசியமான ஆவணமாக மாறியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். உங்களிடம் ஆதார் அட்டை இல்லையென்றால், உங்களின் பல முக்கியமான பணிகள் முழுமையடையாமல் இருப்பது மட்டுமல்லாமல், எந்த அரசாங்கத் திட்டத்தையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது. ஆதாரின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் அதிகரித்து வரும் நிலையில், ஆதார் அட்டை தொடர்பான மோசடி அபாயமும் அதிகரித்து வருகிறது. எனவே, ஆதார் அட்டையைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஆதார் அட்டையில் நடக்கும் மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க குடிமக்களுக்கு, ஆதார் வழங்கும் அமைப்பான யுஐடிஏஐ (UIDAI) சில குறிப்புகளை பகிர்ந்துள்ளது. இதற்காக, சமீபத்தில், UIDAI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ட்வீட் செய்து தேவையான தகவல்களை வழங்கியுள்ளது.
UIDAI இன் அதிகாரி போல் நடித்து, மோசடிக்காரர்கள் உங்கள் விவரங்களையும் ஆவணங்களையும் கேட்கக்கூடும்
யுஐடிஏஐ அமைப்பு குடிமக்களிடம் போன் கால் செய்து ஆதார் அட்டையை புதுப்பிக்கச் சொல்லாது என ஒரு ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. தொலைபேசி அழைப்பு, சமூக ஊடகங்கள், மின்னஞ்சல், வாட்ஸ்அப் அல்லது தனிப்பட்ட முறையில் UIDAI-ன் பணியாளராக தன்னைக் காட்டிக்கொண்டு உங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பிக்கும்படி யாராவது உங்களிடம் கேட்டால், எச்சரிக்கையாக இருங்கள் என்று UIDAI தெரிவித்துள்ளது. அத்தகைய நபர்கள் மோசடிக்காரர்களாக இருக்கலாம். அவர்கள் உங்களது தனிப்பட்ட விவரங்கள் அல்லது ஆவணங்களைக் கேட்க தங்களால் இயன்றவரை முயற்சி செய்யலாம். ஆனால் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் எந்த வகையான ஆவணத்தையும் எந்த நபருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என யுஐடிஏஐ எச்சரித்துள்ளது.
#BewareOfImposters who may try to approach you through different means, posing as authorized officials to get your #Aadhaar updated.
Never share your personal documents with such imposters.
For any other query, you can also call to 1947 (Toll-Free), or email at help@uidai.gov.in pic.twitter.com/tNgKSrRrwU— Aadhaar (@UIDAI) October 24, 2022
மேலும் படிக்க | ஆதார் தொடர்பான புகார்களை எவ்வாறு தாக்கல் செய்வது?
ஆதார் தொடர்பான அனைத்து வகையான தகவலுக்கும், குடிமக்கள் ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம்
ஆதார் அட்டை தொடர்பான எந்த வகையான தகவலுக்கும், பொதுமக்கள் UIDAI இன் ஹெல்ப்லைன் எண் 1947ஐ அழைக்கலாம், அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். ஆதார் அட்டையில் எந்த விதமான புதுப்பிப்புகளையும் செய்ய இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டையை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் புதுப்பிக்கலாம்.
உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிக்க விரும்பினால், இதற்கு நீங்கள் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அதற்கான செயல்முறையை செய்ய வேண்டும். அல்லது m-Aadhaar மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும். உங்கள் ஆதார் அட்டையை ஆஃப்லைனில் புதுப்பிக்க விரும்பினால், நீங்கள் ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும். இதைத் தவிர ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேறு வழியில்லை.
மேலும் படிக்க | ஆதார் கார்டுக்கான கட்டணங்கள் உயர்வு! புதிய கட்டண விவரம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ