7வது ஊதியக்கமிஷன் எச்ஆர்ஏ உயர்வு: மத்திய ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அலவன்ஸையும் அதிகரிக்க வழிவகுக்கும். ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் அகவிலைப்படி அதிகரித்து வருகிறது. இப்போது ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவிலும் அதிகரிப்பு இருக்கக்கூடும்.
அரசு ஏற்கனவே இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் எச்ஆர்ஏ-வில் அதிகரிப்பு ஏற்படப்போவது உறுதியாகும். 2023-ம் ஆண்டுக்குள் ஊழியர்களின் எச்ஆர்ஏ அதிகரிக்கும். இருப்பினும், அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 16 சதவீதம் அதிகரித்தால் மட்டுமே இது நடக்கும். ஜூலை 2022க்குப் பிறகு, அகவிலைப்படி 4-5 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எச்ஆர்ஏ: அடுத்த திருத்தம் எப்போது
விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படி 38 அல்லது 39 சதவீதமாக அதிகரிக்கலாம். தற்போது அகவிலைப்படி 34 சதவீதம் என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. அகவிலைப்படியுடன், பிற கொடுப்பனவுகளிலும் ஒரு அதிகரிப்பு இருக்ககூடும். இதில் மிகவும் முக்கியமானது வீட்டு வாடகை கொடுப்பனவாகும்.
2021 ஆம் ஆண்டில், ஜூலைக்குப் பிறகு, அகவிலைப்படி 25% ஐத் தாண்டியதைத் தொடர்ந்து வீட்டு வாடகை கொடுப்பனவும் திருத்தப்பட்டது. ஜூலை 2021 இல், அரசாங்கம் அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தியது. எச்ஆர்ஏ-இன் தற்போதைய விகிதங்கள் 27%, 18% மற்றும் 9% ஆக உள்ளன. இப்போது அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால் வீட்டு வாடகை கொடுப்பனவில் அடுத்த திருத்தம் எப்போது நடக்கும் என்பது ஊழியர்களின் கேள்வியாக உள்ளது.
எச்ஆர்ஏ: ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன?
DoPT இன் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவின் திருத்தம் அகவிலைப்படியின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டுக்குள் அகவிலைப்படியில் மூன்று மாற்றங்கள் இருக்கும் என்பது உறுதி.
அதாவது ஜூலை 2022 இல் ஏற்படும் அதிகரிப்புக்குப் பிறகு, டிஏ மூன்று மடங்கு அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், இது 50 சதவீதத்தை தாண்டும் சாத்தியம் உள்ளது. அப்படி நடந்தால், எச்ஆர்ஏ 2023 ஆம் ஆண்டில் அதிகரிக்கும்.
நகரத்தின் வகையின்படி, எச்ஆர்ஏ 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. அகவிலைப்படி அதிகரிப்புடன் இந்த உயர்வு ஜூலை 1, 2021 முதல் அமலில் உள்ளது. 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு குறிப்பாணையில், அகவிலைப்படியுடன் வீட்டு வாடகை கொடுப்பனவிலும் அவ்வப்போது திருத்தம் செய்யப்படும் என்று அரசாங்கம் கூறியிருந்தது.
எச்ஆர்ஏ: கொடுப்பனவு 3% அதிகரிக்கும்
வீட்டு வாடகை கொடுப்பனவில் அடுத்த திருத்தம் 3% ஆக இருக்கும். எச்.ஆர்.ஏ தற்போதுள்ள அதிகபட்ச விகிதமான 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்படும். ஆனால், அகவிலைப்படி 50% -ஐ அடையும் போதுதான் இது நடக்கும்.
அகவிலைப்படி 50% ஐத் தாண்டினால், வீட்டு வாடகை கொடுப்பனவு 30%, 20% மற்றும் 10% ஆக மாறும். வீட்டு வாடகை கொடுப்பனவு, X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களின்படி வகைப்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ் பிரிவில் வரும் மத்திய பணியாளர்களுக்கு 27 சதவீத ஹெச்ஆர்ஏ கிடைக்கிறது. அகவிலைப்படி 50 சதவீதமானால், இது 30 சதவீதமாகும். ஒய் வகுப்பினருக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயரும். இசட் வகுப்பு ஊழியர்களுக்கு இது 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும்.
எச்ஆர்ஏ அதிகரித்தால் எவ்வளவு பணம் அதிகரிக்கும்?
7வது ஊதியக்குழு மேட்ரிக்ஸின் படி, மத்திய ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு 56,900 ரூபாய் ஆகும். வீட்டு வாடகை கொடுப்பனவு 27 சதவீதமாக கணக்கிடப்படுகிறது. இதை எளிய கணக்கீடு மூலம் புரிந்து கொள்ளலாம்.
- எச்ஆர்ஏ = ரூ 56900 x 27/100 = ரூ 15363/மாதம்
- எச்ஆர்ஏ 30% ஆனால் = ரூ 56,900 x 30/100 = ரூ 17,070/மாதம்
- எச்ஆர்ஏ-ல் மொத்த அதிகரிப்பு: ரூ 1707/மாதம்
- ஆண்டு எச்ஆர்ஏ அதிகரிப்பு = ரூ 20,484
மேலும் படிக்க | 7th Pay Commission: LTC விதிகளில் முக்கிய மாற்றம், புதிய விதிகள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR