ஆஸி., கிரிக்கெட் அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ஒரு போட்டியில் இருந்து நீக்கியதுடன், அவருக்கு ஒரு போட்டிக்கான ஊதியத்தை அபராதமாகவும் விதித்துள்ளது ICC!
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் கேமரான் பேங்கிராப்ட் பந்தைச் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. ஆஸ்திரேலியா அணி பீல்டிங் செய்த போது கேமரான் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறிய மஞ்சள் நிற பொருளை எடுத்து தனது உள்ளாடைக்குள் போட்ட காட்சி வீடியோவில் தெளிவாக பதிவானது.
அந்த பொருளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தி அவர் ஆட்டத்தின் போக்கினை மாற்ற திட்டமிட்டார் என எதிர் அணி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டடது. இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தலைவர், துணைத்தலைவர் பொறுப்புகளில் இருந்து ஸ்டீவ் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் நீக்கப்பட்டனர் எனவும், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான எஞ்சி உள்ள போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக டிம் பெயின் செயல்படுவார் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது ஸ்டீவ் சுமித் ஒரு போட்டியில் பங்கேற்க ICC தடை விதித்துள்ளது. மேலும் ஒரு போட்டிக்கான முழு ஊதிய தொகையினையும் அவர் அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது