ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்.பிகள் விஜயவாடாவில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 5-ம் தேதி துவங்கியது. இந்த இரண்டாவது அமர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே தமிழ்நாடு, தெலுங்கானா, தெலுங்குதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி-க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து இந்த அமர்வானது முதல்நாளே முடங்கியது.
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க, தி.மு.க எம்.பி-க்கள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஒற்றுமையை வெளிப்படுத்திய இருகட்சிகளும் அந்த டெக்னிக்கை நாடாளுமன்றத்திலும் சிறப்பாக கையாள்கிறது.
Delhi: Telugu Desam Party (TDP) MPs hold protest in Parliament premises demanding special status for #AndhraPradesh pic.twitter.com/BTQR8opwas
— ANI (@ANI) March 22, 2018
இதையடுத்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திர மாநில எம்.பி-க்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றனர். கையில் பதாகைகளுடன் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#AndhraPradesh: Telugu Desam Party (TDP) held protest in Vijayawada demanding special status for the state. pic.twitter.com/kgBAg4Th10
— ANI (@ANI) March 22, 2018
இதே போன்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி 16-வது நாளாக நாடளுமன்ற வளாகத்தில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 5ம் தேதி நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்து அதிமுக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#Delhi: AIADMK MPs hold protest in Parliament premises over #Cauvery issue. pic.twitter.com/dHnXwGuJty
— ANI (@ANI) March 22, 2018
இந்தநிலையில், இதை தொடர்ந்து இன்று காலை ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேசம் கட்சியினர் விஜயவாடாவில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். விஜயவாடா-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர்.