#Cauvery: திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம்: வைகோ, திருமாவளவன் பங்கேற்பு!

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு இருக்கவேண்டிய அதிகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது!  

Last Updated : May 22, 2018, 12:20 PM IST
#Cauvery: திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம்: வைகோ, திருமாவளவன் பங்கேற்பு! title=

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியதை அடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வரும் 22-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தெரிவித்திருந்தது. இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில், அடுத்து கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வரும் 22-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் வைகோ, முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், திருமாளவன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் 20-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதில், ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சிலர்  பங்கேற்கவில்லை. இந்நிலையில், திமுக சார்பில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 22-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

Trending News