விஜய் மகளுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்: எதை பற்றி தெரியுமா?

அஜித்-விஜய் இருவருமே சினிமாவை தாண்டி நட்பாக தான் பழகி வருகிறார்கள். அஜித், இந்த நிலையில், விஜய்யின் மகள் சாஷா திவ்யாவிற்கு ஒரு அட்வைஸ் செய்துள்ளாராம். 

Last Updated : Mar 17, 2018, 05:27 PM IST
விஜய் மகளுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்: எதை பற்றி தெரியுமா? title=

விஜய், அஜித் இருவருமே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஆவார்கள். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கர்களுக்கு பிறகு திரையரங்குகளுக்கு நம்பி போவது இவர்கள் படத்திற்கு தான்.

அஜித் தான் தற்போது இருக்கிற ஹீரோக்களில் அழகானவர், கிங் ஆப், மாஸ் ஹிரோ இப்படி பல பட்டங்கள் அவருக்கு உண்டு. இவர் தற்போது, 4வது முறையாக டைரக்டர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் விஜய் போல் நடனம், காமெடி, நடிப்பு, மாஸ் ஓபனிங் என்று எல்லாவற்றிலும் தனித்திறமை கொண்டவர் இவரை போன்று யாரும் நடிக்க முடியாது என்று தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி சூப்பர் ஸ்டார்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் பாராட்டுக்கள் பெற்ற பெருமை இவருக்கு உண்டு.

இவர் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க  62-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கடந்த ஜனவரி 19-ம் தேதி பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கியது. 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளிவரும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதனால், விஜய் 62 படம் இந்த வருட தமிழ் புத்தாண்டை எதிர்நோக்கி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அஜித், விஜய் இவர்கள் இருவருக்குமே ஒரு கோடிக்கு மேல் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே தமிழகத்தில் குறைந்தது 400 அல்லது 450 திரையரங்குகள் வரை ரிலிஸ் ஆகும்.

இந்த நிலையில், அஜித், விஜய்யின் மகள் சாஷா திவ்யாவிற்கு ஒரு அட்வைஸ் செய்துள்ளாராம். அது என்னவென்றால் அஜித் மகள் பேட்மிட்டன் பயிற்சி எடுத்துவரும் இடத்தில் தான் சாஷாவும் பயிற்சி பெற்று வருகிறாராம்.

அப்போது அஜித், எப்போதும் விளையாட்டை விட்டுவிடாதே, அது உன் உடலுக்கும், மனதிற்கு நல்லது என்று கூறியுள்ளாராம். இப்படி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Trending News