லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்!

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மனைவியாகும் நயன்தாராவுக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்!

Last Updated : Mar 24, 2018, 01:51 PM IST
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்! title=

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக "நடிகையர் திலகம்" என்ற பெயரில் உருவாகிறது. 

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கில் உருவாகும் என தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், சாவித்திரியாக நடிக்கிறார். அவர் காதல் கணவர் ஜெமினி கணேசனாக, துல்கர் சல்மான் நடிக்கிறார். சமந்தா, ஷாலினி பாண்டே, ராஜேந்திர பிரசாத் உட்பட பலர் நடிக்கின்றனர். 

இந்த படத்தின் சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெமினி கணேஷன் வேடத்தில் நடிக்கும் துல்கர் சல்மான் புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் தேவர கொண்டா, நாக சைதன்யா, பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டே, மாளவிகா நாயர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் இந்த படத்தை நாக அஸ்வின் இயக்குகிறார். இதையடுத்து இப்படத்தின் படபிடிப்பனது நேற்று முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படமானது மே மாதம் 9-ம் தேதி வெளிவருவதாகவும் படப்பிடிப்பு குழு அறிவித்துள்ளது. 

இதையடுத்து, நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்ர்தை தொடர்ந்து தளபதி 62, விக்ரமின் சாமி 2 மற்றும் சண்டக்கோழி 2 என பல்வேறு படங்களில் பிஸியாகி உள்ளார். இப்படங்களை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ், ஆந்திர முதல்வராக இருந்து ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஒய்.எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கையை வாழ்க்கை சரித்திர படத்தில் ஒய்.எஸ்.ஆர் வேடத்தில் மம்மூட்டியும், ஒய்.எஸ்.ஆர்-ன் மனைவி விஜயம்மாவாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளனர் எனவும் இப்படத்தை இயக்குனர் மகிராகவ் என்பவர் இயக்குகிறார் என அறிகாரபூர்வமான தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.அதுமட்டுமின்றி கீர்த்தி சுரேஷ்  ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மருமகளாக நடிக்கவுள்ளார் எனவும் கூறுகின்றனர். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜகன் மோகன் ரெட்டியின் மனைவியான ஒய்.எஸ்.பாரதி வேடத்தில் தான் அவர் நடிக்கவுள்ளார். 

அதாவது, நயன்தாராவுக்கு மருமகளாகா வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.  இப்படத்திற்கு யாத்ரா என பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது! 

Trending News