Why India Abstaine Support UNGAs Resolution: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போர் 22வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதற்கிடையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக, இஸ்ரேலிய இராணுவம் (IDF) காசா பகுதிக்குள் டாங்கிகளுடன் நுழைந்து ஹமாஸ் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உள்ள பெய்ட் ஹனூன் மற்றும் பூரிஜ் பகுதிகளில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
காஸாவில் தரைவழி தாக்குதல்களை அதிகரித்து வருவதாக ஐடிஎஃப் (Israel Defense Forces) கூறியுள்ளது. அதேநேரத்தில் ஹமாஸின் தளங்களை குறிவைத்து விமானத் தாக்குதல்களும் நடக்கின்றன. இத்தாக்குதல் காரணமாக காசா பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதுடன் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டு உள்ளது. சுமார் 23 லட்சம் பேர் உலகில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளனர்.
ஐ.நா. பொது சபையில் போர் நிறுத்தம் தீர்மானம்
முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு (இந்திய நேரப்படி) 2 மணிக்கு ஐநா பொதுச் சபையில் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிர்த்து 14 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை.
மேலும் ஓடிக்க - Israel-Hamas War: ஹமாஸ் தாக்குதல் எங்கள் தோல்வி -ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்
போர் நிறுத்த வரைவுத் தீர்மானத்தை கொண்டு வந்த ஜோர்டான் அரசு
இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவதற்கான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்கவில்லை. "பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட மற்றும் மனிதாபிமானக் கடமைகளை நிலைநிறுத்துதல்" என்ற அடிப்படையில் உடனடியாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானத்தை ஜோர்டான் அரசு கொண்டு வந்தது. ஆனால் இந்தியா தீர்மானத்தை புறக்கணித்தது. அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிர்த்து 14 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை.
ஜோர்டான் வரைவுத் தீர்மானத்தின் முக்கிய அம்சம் என்ன?
ஜோர்டான் வரைவுத் தீர்மானத்தில், மனிதாபிமான அடிப்படையில் உடனடியாகபோர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. தண்ணீர், உணவு, மருத்துவப் பொருட்கள், எரிபொருள் மின்சாரம் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் உடனடியாகவும், தொடர்ச்சியாகவும் போதுமான அளவு காசா பகுதி முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று தீர்மானத்தில் கோரியிருந்தது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ், குடிமக்கள் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத அத்தியாவசியப் பொருட்கள் சேவை தடை படாமல் இருப்பதை உறுதிசெய்யும் கட்டாயத்தை வரைவு தீர்மானம் வலியுறுத்தியது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிற அனைத்து மனிதாபிமான அமைப்புகளுக்கும் வரைவுத் தீர்மானதிற்கு ஆதரவாக இருந்தனர்.
ஐ.நா. தீர்மானத்தை இந்தியா புறக்கணிக்க காரணம் என்ன?
ஐ.நா. பொதுச் சபை இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜனா படேல் கூறுகையில். மோசமான நிலைமை மற்றும் தற்போதைய மோதலில் பொதுமக்கள் உயிர் இழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளின் தீர்வுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது, இது பாலஸ்தீனத்தின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் சாத்தியமான பாலஸ்தீனத்தை நிறுவுவதற்கு வழிவகுத்து. வன்முறையைத் தவிர்ப்பது மற்றும் நேரடி சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கு பங்களிப்பை செய்ய வேண்டும் என்றார்.
அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்த படேல், இஸ்ரேலில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் கண்டனத்திற்கு தகுதியானவை என்றார். பணயக்கைதிகளை உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பயங்கரவாதம் ஒரு கொடியது. அதற்கு எல்லை, தேசியம் அல்லது இனம் கிடையாது. பயங்கரவாதச் செயல்களை எந்த நியாயப்படுத்துதலும் கற்பிக்கக் கூடாது. வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றுபடுவோம், பயங்கரவாதத்தை எதிரான முறைகளை கடைப்பிடிப்போம் என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கிய பிறகு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய இந்திய பிரதமர் மோடி, "நாங்கள் அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் எதிரானவர்கள் என்று கூறியிருந்தார். இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள் இஸ்ரேலுடன் இருக்கிறார்கள் எனக் கூறியிருந்தார்.
வெளியுறவு நிபுணரும் ORF ஆய்வாளருமான கபீர் தனேஜாவின் கூற்றுப்படி, கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசின் இராஜதந்திரம் பயங்கரவாதத்திற்கு எதிரானது. பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கை அந்த ராஜதந்திரத்தின் ஒரு பகுதியாகும் என்றார்.
பாலஸ்தீனம் தொடர்பாக இந்திரா காந்தி அரசு அல்லது அதன்பிறகு வந்த மற்ற அரசாங்கங்களின் காலத்தில் இருந்த ஒரே நிலைப்பாட்டை இந்தியா இன்னும் கொண்டுள்ளது என்று தனேஜா கூறினார். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க இரு நாடுகளின் தீர்வை இந்தியா ஆதரிக்கிறது. போரின் மத்தியிலும், பாலஸ்தீனியர்களுக்கு உதவ இந்தியா அத்தியாவசிய பொருட்களை அனுப்பியது. எனவே ஐநா தீர்மானத்தில் இருந்து இந்தியா விலகி இருப்பதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.
வரைவுத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த அமெரிக்கா
ஜோர்டானிய வரைவுத் தீர்மானத்தில் ஹமாஸ் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறிய ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், "எங்கள் முன் உள்ள தீர்மானத்தில் இரண்டு முக்கிய வார்த்தைகள் இல்லை. முதலாவது ஹமாஸ். அக்டோபர் 7 பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் ஹமாஸ் என்று குறிப்பிடமால் இந்தத் தீர்மானம் தவறியிருப்பது மூர்க்கத்தனமானது என்றார்.
ஹமாஸின் பெயரை குறிப்பிடாத தீர்மானத்திற்கு அமெரிக்கா சீற்றத்தை வெளிப்படுத்தியது மற்றும் அதை "தீமையின் புறக்கணிப்பு" என்று அழைத்தது. "நீங்கள் கவனிப்பது போல், ஹமாஸ். இது மூர்க்கத்தனமானது, ”என்று , தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன் தனது கருத்துக்களில் கூறினார். தீர்மானத்தில் விடுபட்ட மற்றொரு முக்கிய வார்த்தை "பணயக்கைதி" என்று அவர் கூறினார். இந்தத் தீர்மானம் அப்பாவி மக்களைப் பற்றி குறிப்பிடவில்லை தாமஸ் கூறினார்.
ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் -இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன்
இந்தத் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் வாக்களித்தன. நியூயார்க்கில் நடந்த ஐ.நா கூட்டத்தில் இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் கூறுகையில், 'இதுபோன்ற அட்டூழியங்களை ஹமாஸ் செய்ய அனுமதித்து நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. இதுபோன்ற கொடுமைகள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த உரிமை. ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் போதுதான் இது நடக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ