வரலாறு காணாத கடும் வீழ்ச்சி... தண்ணீரை விட மலிவாகும் கச்சா எண்ணெய்

இப்போது தண்ணீரை விட கச்சா எண்ணெய்யின் விலை மலிவானது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 30 சதவீதம் குறைந்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 10, 2020, 12:54 AM IST
வரலாறு காணாத கடும் வீழ்ச்சி... தண்ணீரை விட மலிவாகும் கச்சா எண்ணெய் title=

புது டெல்லி: இப்போது தண்ணீரை விட கச்சா எண்ணெய்யின் (Crude Oil) விலை மலிவானது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 30 சதவீதம் குறைந்துள்ளது.அதன் காரணமாக கச்சா எண்ணெய் (Crude Oil) இந்திய சந்தையில் ஒரு பீப்பாயில் விலை ரூ.2,200 ஆக குறைந்துள்ளது. இது 1991 வளைகுடாப் போருக்குப் பிறகு கச்சா எண்ணெயின் விலையில் மிகப்பெரிய ஒரு நாள் சரிவு ஆகும். இது முக்கிய காரணம் சவுதி அரேபியாவின் எண்ணெய் விலை குறைப்பு ஆகும்.

ஒரு பீப்பாயில் 159 லிட்டர் கச்சா எண்ணெய் (Crude Oil) இருக்கும். அதன் அடிப்படையில் பார்த்தால் ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை சுமார் 13-14 ரூபாயாக இருக்கும். அதே நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் குறைந்தபட்சம் ரூ .20 செலுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் படிக்க: தொடர்ந்து 8-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயா்வு

விலை மாற்றம் மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக கச்சா எண்ணெய் (Crude Oil) கடும் சரிவை கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை திங்களன்று 30 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.

மேலும் படிக்க: ஹாட் போட்டோஷூட்! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த தீபிகா -Viral Photo

கச்சா எண்ணெய் (Crude Oil) விலை உள்நாட்டு சந்தையில் 30 சதவீதத்திற்கும் மேலாக குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 2,200 ரூபாய் அளவுக்கு சென்றது. கச்சா எண்ணெயின் விலை மேலும் குறையக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

Trending News