நீடிக்கும் சிக்கல்... பாகிஸ்தான் பிரதமர் நாற்காலியை அலங்கரிக்க போவது யார்...!

பாகிஸ்தானில் 2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் நிறைவடைந்து சுமார் ஒரு மாத காலம் ஆகிவிட்ட நிலையிலும் கூட புதிய பிரதமர் இன்னும் பதவியேற்கவில்லை. எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து இழுபறிஒ நீடிக்கிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 1, 2024, 10:54 PM IST
நீடிக்கும் சிக்கல்... பாகிஸ்தான் பிரதமர் நாற்காலியை அலங்கரிக்க போவது யார்...!  title=

Pakistan News: பாகிஸ்தானில் 2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் நிறைவடைந்து சுமார் ஒரு மாத காலம் ஆகிவிட்ட நிலையிலும் கூட புதிய பிரதமர் இன்னும் பதவியேற்கவில்லை. எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து இழுபறிஒ நீடிக்கிறது. ராணுவம் போட்ட கணக்கு பொய்த்துப் போன நிலையில், முஸ்லிம் லீக் நவாஸ், பாகிஸ்தான் மக்கள் கட்சி, மற்றும் சிறிய கட்சிகள் இணைந்து ஆட்சியைப் பிடிக்க முயன்று வருகின்றனர். மறுபுறம் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஈ-இன்சாப் கட்சியினர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், ஆட்சியைப் பிடிக்க காய்களை நகர்த்தி வருகின்றனர்.

பாகிஸ்தானின் 16வது நாடாளுமன்ற கூட்டத்தொடர்

பாகிஸ்தானில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் 16 வது நாடாளுமன்ற கூட்டத்தொடர், வரும் ஞாயிற்றுக்கிழமை கூடி, பிரதமரை தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாகிஸ்தானின் முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவு கட்சியைச் சேர்ந்த, சபாஷ் ஷரீஃப் பிரதமராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் மோசடி  நடந்ததற்கான ஆதாரங்கள்

இந்நிலையில், அமெரிக்காவில் ஆளும் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் மோசடி நடந்ததற்கான வலுவான ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஜனாதிபதி ஜோ பிடனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இது தொடர்பாக வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணை நடத்தப்படும் வரை பாகிஸ்தானின் புதிய அரசை அங்கீகரிக்கக் கூடாது என்று அந்தக் குழு தனது கடிதத்தில் கோரியுள்ளது. இந்தக் குழுவில் முஸ்லிம் எம்.பி.க்களும் அடங்குவர். 'தேர்தல் முறைகேடு நடந்துள்ளது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதை கருத்தில் கொண்டு, பாகிஸ்தானின் புதிய அரசாங்கத்தை அங்கீகரிப்பதற்கு முன், முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோருகிறோம்' என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் விபரம்

பாகிஸ்தானில் நடந்த தேர்தலில், பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் (PML-N) கட்சி 75 இடங்களிலும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. முட்டாஹிதா குவாமி இயக்கம் பாகிஸ்தான் 17 இடங்களில் வெற்றி பெற்றது. ராணுவத்தின் கட்டுப்பாடுகள், அடக்குமுறை அனைத்தையும் மீறி இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் சுயேட்சையாக நின்று 116 இடங்களில் வென்று ஆச்சரியம் அளித்துள்ளனர். இங்கு தான் சிக்கலே ஆரம்பமாகியது. ராணுவத்தின் கணக்கு பொய்த்து போனது. 

தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள்

தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் வைரல் ஆனது. ராணுவம் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை, அவர்கள் செய்த தேர்தல் முறையீடுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.  இம்ரான் கட்சியை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டி இட்டல் நிலையில் தாங்கள் பல இடங்களில் வேண்டுமென்றே தோற்கடித்ததாக குற்றம் சாட்டினர். தேர்தலில் தோற்ற இம்ரான் கட்சியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர்கள் பலர் நீதிமன்றத்தை அணுகிய போதும் பலன் ஏதுமில்லை. அவர்கள் மனு நிராகரிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நாளிலேயே, நாட்டில் மொபைல் நெட்வொர்க் முடக்கப்பட்டது என்பதிலிருந்து, ராணுவத்தின் அட்டூழியங்கள் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Trending News