20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கம்மை...எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

குரங்கம்மை 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

Written by - Chithira Rekha | Last Updated : May 27, 2022, 02:34 PM IST
  • 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை
  • எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
  • கண்காணிப்பை அதிகரிக்க வலியுறுத்தல்
20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கம்மை...எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு title=

வைரஸ் தொற்றால் ஏற்படும் குரங்கம்மை ஆப்பிரிக்க நாடுகளான கேமரூன், காங்கோ, நைஜீரியாவில் பரவலாக உள்ளது. ஆனால், பரவலாக காணப்படும் நாடுகளின்றி பல்வேறு புதிய நாடுகளிலும் குரங்கம்மை தொற்று அதிகரித்து வருகிறது.

ஐரோப்பாவில் ஜெர்மனி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளைத் தவிர, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர்த்து மிக அரிதாகப் பரவிய குரங்கம்மை பாதிப்பு இம்முறை வேகமாகப் பரவி வருவதால் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Monkeypox: உலகை அச்சுறுத்தும் குரங்கு காய்ச்சல்; அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்

World Health Organization

இதுவரை உலகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்டோருக்கு அறிகுறிகள் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டுமெனவும் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

இதுவரை இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும் தொற்று பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருவோர் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். 

மேலும் படிக்க | வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News