இஸ்லாமாபாத் நீண்ட காலமாக தலிபான்களின் பாதுகாவலராக இருந்தார் என்பதை ஒப்புக் கொண்ட பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத், தாலிபன்களுக்கு அடைக்கலம் கொடுத்து வலுப்படுத்த பாகிஸ்தான் அரசு பணியாற்றியதை ஒப்புக் கொண்டார். தங்கள் ஒத்துழைப்பின் விளைவாகவே 20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபன் அமைப்பு மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தலிபான்களின் மிகப்பெரிய 'பாதுகாவலர்' என பாகிஸ்தானின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. பாகிஸ்தானின் ஒப்புதல் வாக்குமூலத்தை கொடுத்திருப்பவர் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் (Pakistan's Interior Minister Sheikh Rashid) என்பதால், இந்த வாக்குமூலம் முக்கியத்துவம் பெறுகிறது.
தலிபான்கள் தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள முக்கியமான இந்த அறிக்கை பல கேள்விகளை எழுப்புகிறது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு, இந்தியா மீது காழ்ப்புணர்வு இருக்கும் நிலையில், இந்த ஒப்புதல் வாக்குமூலம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.
Also Read | Afghanistan Crisis: இந்தியாவை பற்றிய தலிபான் நிர்வாகத்தின் கருத்து இதுவே!
பாகிஸ்தானில் தலிபான்களுக்கு தங்குமிடம், மற்றும் வீடு கொடுத்தோம், அதோடு கல்வி கற்பதற்கான வசதிகளையும் செய்துக் கொடுத்தோம் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஷீத் கூறினார். நாங்கள் அவர்களுக்காக எல்லாவற்றையும் செய்தோம் என்று அவர் கூறுவது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகஸ்ட் 28 அன்று ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டார், ஆப்கானிஸ்தானை இஸ்லாமாபாத் தொடர்ந்து ஆக்கபூர்வமான வழிகளில் ஆதரிக்கும் என்று கூறினார். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் (UNSG) அன்டோனியோ குடெரெசுடன் தொலைபேசியில் பேசியபோதும், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலையை ஆதரித்துப் பேசினார்.
உலக சமூகம் ஆப்கானிஸ்தானுடன் நல்ல உறவை தொடரவேண்டும் என்றும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நிதி உதவி செய்வது, மனிதாபிமான உதவிகளை தொடர வேண்டும் என்றும் ஐநா பொதுச்செயலரிடம் தாலிபன்களுக்காக அவர் பரிந்து பேசினார்.
Read Also | தாலிபான்கள் நல்லெண்ணத்துடன் ஆப்கானை கைப்பற்றியுள்ளனர்: பாக் கிரிக்கெட் வீரர் புகழாரம்
பாகிஸ்தானின் இந்த அறிக்கை இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது
பாகிஸ்தானுக்கு கட்டுப்படும் தாலிபன்களின் ஆட்சிyஇல் ஆப்கானிஸ்தான் இருப்பது இந்தியாவுக்கு கவலை அளிக்கும் விஷயம். அதிலும், தற்போது தலிபான்களுக்கு உதவி செய்திருப்பதாக பகிரங்கமாக கூறும் பாகிஸ்தானின் உள்நோக்கம் என்ன என்பது கவலையளிக்கிறது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் இந்த சர்ச்சைக்குரிய அறிக்கை, ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் கட்டுப்படுத்துவதற்கான முகாந்திரங்கள் இருப்பதை சுட்டிக் காட்டுவதாக பல அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அதாவது, இப்போது பாகிஸ்தானின் உத்தரவின் பேரில் தலிபான்கள் வேலை செய்வார்கள் என்ற நிலையில், இந்தியாவின் கவலையும், அச்சங்களும் நியாயமானதே.
அதே நேரத்தில், பாகிஸ்தானில் தாலிபன்களுக்கு பாதுகாப்பான புகலிடங்கள் இருப்பது குறித்து அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானிடம் (PM Imran Khan) கேள்வி எழுப்பப்பட்டபோது, தலிபான் போராளிகள் மிகவும் தைரியமானவர்கள் என்று இம்ரான் கான் கூறினார். மேலும், அவர்கள் வெளிநாட்டுப் படைகளை விரட்ட தியாகம் செய்தார்கள் என்றும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ALSO READ | Haibatullah Akhunzada: இவர் தான் ஆப்கானின் சுப்ரீம் லீடர் என அறிவித்த தாலிபான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR