Watch Video: விண்வெளிக்கும் உணவு டெலிவரி செய்வோம்; வரலாறு படைத்த Uber Eats!

Uber Eats என்னும் உணவு விநியோக நிறுவனம் விண்வெளிக்கு உணவு டெலிவரி செய்து அசத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது அந்த நிறுவனம்.   

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 16, 2021, 01:53 PM IST
Watch Video: விண்வெளிக்கும் உணவு டெலிவரி செய்வோம்; வரலாறு படைத்த Uber Eats! title=

Food delivery to Space: வீடுகளுக்கு உணவு டெலிவரி வழங்கும் நிறுவனமான உபெர் ஈட்ஸ், பூமியில் மட்டுமல்ல, விண்வெளிக்கும் உணவு விநியோகம் செய்து வரலாறு படைத்துள்ளது. விண்வெளிக்கு உணவு டெலிவரி செய்யும் முதல் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) உணவு வழங்குவதைக் காட்டும் வீடியோவை உபெர் ஈட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது வரலாற்றில் மிகவும் காஸ்ட்லியான உணவு விநியோகம் என்றும் அழைக்கப்படலாம்.

9 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு உணவு டெலிவரி

ஜப்பானிய கோடீஸ்வரரான யுசாகு மேசாவா (Japanese Billionaire Yusaku Maezawa) உபெர் ஈட்ஸ் சார்பாக இந்த உணவை டெலிவரி செய்துள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) விண்வெளி வீரர்களுக்கு உணவு அனுப்பப்பட்டது. டிசம்பர் 11 அன்று, மஜாவா சுமார் 9 மணிநேர ராக்கெட் பயணத்திற்குப் பிறகு ISS என்னும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தார். மேசாவா டிசம்பர் 8 அன்று விண்வெளி வீரர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பேக் செய்யப்பட்ட உணவுகள் அடங்கிய கம்பெனி பேக்கேஜை எடுத்துச் சென்றார். அவர் ISS-ல் சுமார் 12 நாட்கள் செலவிடுவார்.

வீடியோவை இங்கே காணலாம்: 

ALSO READ | Black Hole: பால்வீதியின் மிகப்பெரிய கருந்துளையில் கசிவு என NASA தகவல்!

நன்றி தெரிவித்த விண்வெளி வீரர்கள் 

உபெர் ஈட்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், மெஜாவா கதவைத் திறந்து உணவுப் பொட்டலங்களை விண்வெளி வீரர்களுக்கு கொடுக்க முற்படும் போது, ஈர்ப்பு விசை இல்லாததால் அவை காற்றில் மிதந்து செல்வதையும் அதை விண்வெளி வீரர்கள் கேட்ச் பிடித்ததையும் காணலாம். உணவு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விண்வெளி வீரர், 'ஹே உபெர் ஈட்ஸ், நன்றி' என்றார்.

ALSO READ | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; விண்வெளி நடையை ஒத்தி வைத்தது NASA!

உணவுப் பொட்டலத்தில் இருந்தது என்ன

அந்த உணவுப் பொட்டலத்தில் ஸ்வீட் சாஸில் சமைக்கப்பட்ட இறைச்சி இருந்ததாக அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. விண்வெளி வீரர்கள் அதை உண்ணும் வகையிலான தரத்துடன் தயாரிக்கப்பட்டது. எல்லா இடங்களிலும் டெலிவரி செய்வதே நிறுவனத்தின் குறிக்கோள் என்றும், அந்த இலக்கு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் உபெர் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார். குறிப்பிடத்தக்க வகையில், ஜப்பானிய கோடீஸ்வரர் யுசாகு மேசாவா சமீபத்தில் ட்விட்டரில் ப்சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) பூமி வரையிலான Time Lapse of Earth பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவின் தலைப்பில் மேஜாவா, 'இது பூமியின் ஒரு சுற்று' என்று தலைப்பிட்டுள்ளார்.

ALSO READ | Zero Gravity உள்ள விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News