ஒரே நாளில் 4000 நிலநடுக்கங்கள்! வெடிக்க காத்திருக்கும் எரிமலை

Volcanic Eruption and Earthquake: ஒரே நாளில் 4000க்கும் அதிகமான நில நடுக்கங்களை எதிர்கொண்ட ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 2, 2022, 06:47 AM IST
  • ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது
  • பூகம்பத்தால் அதிரும் ஐஸ்லாந்து
  • ஒரே நாளில் 4000 நில அதிர்வுகள்
ஒரே நாளில் 4000 நிலநடுக்கங்கள்! வெடிக்க காத்திருக்கும் எரிமலை title=

ஒரே நாளில் சுமார் 4,000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் எரிமலை வெடிக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது ஐஸ்லாந்து. ஆகஸ்ட் மாதம் முதல் நாளன்று ஏர்பட்ட இந்த நிலநடுக்கங்கள் வானிலையை மோசமாக்கியிருக்கிறது. ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஒரு புதிய எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்பது பற்றிய கவலையைத் தூண்டியுள்ள இந்த தொடர் நிலநடுக்கங்கள் மிதமானது முதல் கடுமையானது வரை பல்வேறு அளவுகளில் பதிவாகியுள்ளன. இது பூமிக்கு அடியில் மாக்மா இயக்கத்தால் ஏற்படலாம் என்றாலும், இந்த நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்களை உணர்த்துவதாக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தினால், அதிகாரிகள் உச்சபட்ச எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். தொடர் நிலநடுக்கங்களால் அதிர்ந்து போயிருக்கும் மக்கள், எரிமலை வெடிப்புக்கான வாய்ப்பு படிப்படியாக அதிகரித்து வருவதால் கவலைப்படுகின்றனர்.

மேலும் படிக்க | பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலை பகுதிகளில் ஒன்று ஐஸ்லாந்து, வடக்கு அட்லாண்டிக்கில் உள்ள எரிமலை தீவாகும். இந்த தீவில் எரிமலை வெடிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது. அதற்கு முன்னதாக நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த வெடிப்புகள், ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் பூமியின் முழு வடக்கு அரைக்கோளத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

யூரேசியா மற்றும் வட அமெரிக்க டெக்டோனிக் தகடுகளுக்கு இடையில் உள்ள டெக்டோனிக் தட்டு எல்லையில் அதன் இருப்பிடம் காரணமாக, தீவை தொடர்ந்து பூகம்பங்கள் தாக்குகின்றன. மிட்-அட்லாண்டிக் ரிட்ஜ் என்பது இந்தப் பிரிப்புக் கோட்டின் (line of separation, MAR) மற்றொரு பெயர்.

மிட்-அட்லாண்டிக் ரிட்ஜ் ஐஸ்லாந்தின் குறுக்கே கீழே உள்ள கிராஃபிக்கில் செல்கிறது, இது டெக்டோனிக் தட்டுகள் எவ்வாறு பரவுகிறது என்பதையும் காட்டுகிறது.

மேலும் படிக்க | அந்தமானில் ஒரே நாளில் 6வது நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

ரெய்கிஜான்ஸ் தீபகற்பத்தில், அது தென்மேற்கில் நுழைந்து கிழக்கே பயணித்த பிறகு வடக்கே திரும்புகிறது. முக்கிய எரிமலைகள் சிவப்பு முக்கோணங்களாக சித்தரிக்கப்படுகின்றன.

ஆனால் முழு அட்லாண்டிக் பெருங்கடல் முழுவதும், டெக்டோனிக் தகடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தை மிகவும் சிறப்பானதாக்குவது ஹாட்ஸ்பாட் அல்லது மேன்டில் ப்ளூம் ஆகும், இது மேன்டலில் இருந்து உயரும் சூடான, உருகிய பாறையின் செங்குத்து நெடுவரிசையாகும். இது ஐஸ்லாந்திற்கு கீழே உள்ளது. இதன் விளைவாக, இது ஐஸ்லாண்டிக் ப்ளூம் என்று குறிப்பிடப்படுகிறது.

வட்னஜோகுல் பனிப்பாறையின் (Vatnajokull glacier) கீழ் ஐஸ்லாந்தில் ப்ளூம் இணைகிறது. இதனால் இங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகிறது.

மேலும் படிக்க | ஒரு டிரில்லியன் டாலர் கற்பனை நகரத்தை உருவாக்கும் சவூதி அரேபியா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News