Foods To Control Cholesterol Level In Women: பெண்கள் தங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க இந்த 7 உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
கொலஸ்ட்ரால் இரு வகைப்படும். இதில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால் இதய நோய் வரும் ஆபத்து அதிகம். நல்ல கொலஸ்ட்ராலும் சீரான அளவிலேயே இருக்க வேண்டும். அந்த வகையில், ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்க இந்த 7 உணவுகள் உதவும்.
ஆலிவ் ஆயில்: இதில் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் கொழுப்புகள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை அனைத்தும் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்கும்.
சோயா பொருள்கள்: சோயா பால், டோஃபு உள்ளிட்ட புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதனால், அவை அசைவ உணவுகளுக்கு மாற்றாக அமையம். இதனால் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
மீன்கள்: மத்தி, சால்மன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் கொண்ட உணவுகளை சாப்பிடலாம். இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும்.
அவகாடோ: இதில் நிறைவுறாத கொழுப்பும், நார்ச்சத்தும் நிறைந்திருக்கின்றன. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
ஓட்ஸ்: இதிலும் நார்ச்சத்து இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். தினமும் ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடலாம்.
பழங்கள்: ஆரஞ்சு, ஆப்பிள், பெரீஸ் உள்ளிட்ட பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கும் பழங்களை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
நட்ஸ்: பாதாம், வால்நாட், பிஸ்தான் போன்ற இதயத்திற்கு ஆரோக்கியமான நட்ஸ்களை நொறுக்குத்தீனியாக எடுத்துக்கொள்ளுங்கள். இதில் நல்ல கொழுப்பும், நார்ச்சத்தும் உள்ளன.
பொறுப்பு துறப்பு: இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.