Sani Peyarchi Palangal: இன்னும் 10 நாட்களில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Vakra Nivarthi Palangal: அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான் தற்போது வக்ர நிலையில் உள்ளார். அவர் நவம்பர் 15, 2024 அன்று, வக்ர நிவர்த்தி அடைவார். இதன் காரணமாக சனி ஷஷ ராஜயோகத்தின் பலன்கள் அதிகமாகும். சனி வக்ர நிவர்த்தி, அதனால் ஊக்கம் பெறும் ஷஷ ராஜயோகம் ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் ஆக்கப்பூர்வமான பல நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
சனி பகவான் தனது ராசியை மாற்றி ஜனவரி 17, 2023 அன்று தனது சொந்த முக்கோண ராசியான கும்பத்தில் நுழைந்தார். வேத ஜோதிடத்தின்படி, சனி அதன் மூல திரிகோணத்தில் இருக்கும் போது, 'ஷஷ ராஜயோகம்' உருவாகிறது. வேத ஜோதிடத்தின் ஐந்து பெரிய ராஜயோகங்களில் ஷஷ ராஜயோகம் மிகவும் பயனுள்ள ராஜயோகமாக கருதப்படுகின்றது
இந்த ராஜயோகம் மக்களுக்கு மகத்தான செல்வத்தையும் புகழையும் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு, ஜூன் 30, 2024 அன்று, ஜோதிட விதிகளின்படி, சனி கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் இந்த ராஜயோகத்தின் மகிமை குன்றியது. ஆனால், தற்போது நவம்பர் 15, 2024 அன்று, சனி வக்ர நிவர்த்தி அடையும் போது, இந்த யோகத்தின் பலன் மீண்டும் அதிகமாகும்.
சனி வக்ர நிவர்த்தி, அதனால் ஊக்கம் பெறும் ஷஷ ராஜயோகம் ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் ஆக்கப்பூர்வமான பல நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த் அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
மேஷம்: சனி பெயர்ச்சி மற்றும் ஷஷ ராஜயோகத்தின் தாக்கத்தால், மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முதலீடு மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கு வாய்ப்புள்ளது. வேலை தேடிக்கொண்டு இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்: சனி வக்ர நிவர்த்தியும், ஷஷ ராஜயோகமும் கடக ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்களை அள்ளித்தரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து பணிகளையும் ஆர்வத்துடன் செய்வீர்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் அமையும். மூத்த சகோதரர்களுடனான உங்கள் உறவுகள் சுமுகமாக இருக்கும்,
கன்னி: சனி வக்ர நிவர்த்தி கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளித்தரும். ஷஷ ராஜயோகத்தின் தாக்கத்தால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் வளர்ச்சியும், உத்தியோகத்தில் பதவி உயர்வும் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்சியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தனுசு: சனி வக்ர நிவர்த்தியால் உருவாகவுள்ள ஷஷ ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். செயலாற்றும் திறன் மேம்படும். பொருளாதார நிலை மேம்படும். பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் அமையும். குடும்ப வாழ்க்கை அமைதியகாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
கும்பம்: சனியின் ஷஷ ராஜயோகத்தின் தாக்கத்தால், கும்ப ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் உயர்வு இருக்கும். தொழில் சார்ந்த பயணங்கள் லாபகரமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சனி பகவானின் அருள் பெற. ‘நீலாஞ்சன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; சாயா மார்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்’ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம். இது தவிர, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகிய ஸ்தோத்திரங்களை கூறுவதும் பலன் தரும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.