புடினின் மகள்கள் மீது தடைகள்..அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனும் அறிவிப்பு

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனும் ரஷ்ய அதிபர் புடினின் மகள்கள் மீது புதிய தடைகளை விதித்துள்ளது. பயணத்தடை, சொத்துகள் முடக்கம் உள்ளிட்ட தடைகளை பிரிட்டன் அறிவித்துள்ளது. 

Written by - Chithira Rekha | Last Updated : Apr 8, 2022, 07:12 PM IST
  • ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் கெடுபிடி
  • புடினின் மகள்கள் மீது தடைகள் விதிப்பு
  • அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனும் அறிவிப்பு
புடினின் மகள்கள் மீது தடைகள்..அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனும் அறிவிப்பு title=

உக்ரைன் மீது 43-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரினால் தங்களுக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா முதன்முதலாக ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பு அதிகரிப்பது கவலை அளிப்பதாக ரஷ்ய அரசின் செய்தித்தொடர்பாளர் ட்மிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

Putin

உக்ரைன் மீதான போரை நிறுத்தக் கூறி பல முறை எச்சரித்தும் உடன்படியாததால் உலக நாடுகள் ரஷ்யாவுக்கு பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இது எதற்கும் ரஷ்யா அசைந்து கொடுக்காத நிலையில், அந்நாட்டு அதிபர் புடினின் மகள்கள் கத்ரீனா, மரியா ஆகியோருக்கு அமெரிக்கா நேற்று பலத் தடைகளை அறிவித்தது.  கத்ரீனா ரஷ்ய அரசின் பாதுகாப்பு தொழிற்சாலையில் தொழில்நுட்ப நிபுணராகவும், மரியா மரபணு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் அமெரிக்காவில் உள்ள சொத்துகளை  முடக்குவதாகவும், இனி அவற்றைப் பயன்படுத்த முடியாது எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து தற்போது பிரிட்டனும் புடினின் மகள்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அவர்கள் இருவரும் இனி பிரிட்டனுக்கு பயணம் செய்ய முடியாது எனவும், பிரிட்டனில் அவர்களுக்கு சொத்துகள் இருந்தால் அவை முடக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. எனினும், பிரிட்டனில் அவர்களுக்கு சொத்துகள் உள்ளனவா என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

மேலும் படிக்க | உக்ரைன் புச்சா நகர் படுகொலை தொடர்பாக தனிப்பட்ட விசாரணை தேவை என்கிறது இந்தியா

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News