Turkey Earthquake 248 மணி நேரத்திற்கு பிறகும் உயிருடன் மீட்கப்படும் அதிர்ஷ்டசாலிகள்

Rescued 3 Alive After 248 hours of earthquake: துருக்கி-சிரியா நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்தை கடந்த நிலையில் இதுவரை 44,000 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 248 மணி நேரத்திற்குப் பிறகு மூவர் உயிருடன் மீட்கப்பட்டனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 17, 2023, 03:56 PM IST
  • துருக்கி நிலநடுக்க பணி எண்ணிக்கை மேலும் உயர்கிறது
  • நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்கி ஒரு வாரத்திற்கு பிறகும் உயிருடன் மீட்கப்படுபவர்கள்
  • ஆச்சரியமளிக்கும் மீட்புப்பணிகளுக்கு பாராட்டுகள் குவிகின்றன
Turkey Earthquake 248 மணி நேரத்திற்கு பிறகும் உயிருடன் மீட்கப்படும் அதிர்ஷ்டசாலிகள் title=

துருக்கி-சிரியா நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்தை கடந்த நிலையில் இதுவரை 44,000 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 248 மணி நேரத்திற்குப் பிறகு மூவர் உயிருடன் மீட்கப்பட்டனர். துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், இடிபாடுகளில் இன்னும் பலர் உயிருடன் இருப்பது ஆச்சரியத்தை அளிப்பதால், தொடர்ந்து மக்களை தேடும் முயற்சிகளில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.  

248 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையில் இருந்து 248 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டவர்களில்  ஒருவரான அலீனா, கஹ்ராமன்மாராஸ் சுட்கு இமாம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் சிகிச்சை பெற்று வருகிறார், அவர் நலமுடன் இருப்பதைக் கண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், மருத்துவர்களுக்கு ஆச்சரியமும் ஏற்படுகிறது.  

நிலநடுக்கம் ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு மீட்பு
துருக்கி மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து உயிர் பிழைத்ததற்கான அதிசயக் கதைகள் தொடர்ந்து வெளிவருகின்றன. துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட மூவரில் இருவர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Earthquake: துருக்கியில் இனி மீட்புப்பணி இல்லை! காரணம் என்ன? இடிபாடுகளுக்குள் யாரும் இல்லையா?

அதிர்ஷ்டசாலி நபர்கள்

அவர்களில் ஒருவர் 17 வயதான அலீனா உல்மேஸ், பிப்ரவரி 6ம் தேதி நடைபெற்ற துருக்கி பூகம்பத்தில், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். சிதைபாடுகளில் இருந்து 248 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட. அலினா "அதிசய பெண்" என்று அழைக்கப்படுகிறார்.

சுமார் 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, 30 வயதான நெஸ்லிஹான் கிலிக் மற்றும் 12 வயது ஓஸ்மான் என்ற சிறுவன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் அருகில் உள்ள இடிபாடுகளுக்குள் புதைந்து கிடப்பதாக இருவரும் மீட்புக்குழுவினரிடம் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | Earthquake: நிலநடுக்கத்தின் கோரத்தண்டவத்தின் எதிரொலி! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் மொத்தம் 43,885 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு முயற்சிகள் முடிவடையும் நிலையில் உள்ளன, ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகும் மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால், மீட்பவர்கள் இன்னும் அதிகமாகக் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தேடுதல் பணி தொடர்கிறது.

இருப்பினும், குளிர் காலநிலை தேடுதல் பணிகள் மிகவும் சிரமமாக இருக்கின்றன.தளவாடச் சவால்கள் காரணமாக உதவிகளை அனுப்புவது எளிதல்ல என்பதுடன், சிரியா அதிக பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

மேலும் படிக்க | துருக்கி சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை  அதிகரிப்பு! உதவிக்கு விரைந்த இந்தியா

துருக்கி-சிரியா நிலநடுக்க மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்

மில்லியன் கணக்கானோர் தற்போது வீடற்ற நிலையில் உள்ள நிலையில், சர்வதேச உதவி நிறுவனங்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. மக்கள் கூடாரங்கள், மசூதிகள், பள்ளிகள் மற்றும் கார்களில் கூட தூங்குகிறார்கள்.

துருக்கி மற்றும் சிரியாவில் நிலவும் குளிர் காலநிலையால் நிலைமை மோசமாக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணி தொடர்பான நிதித் தேவையை பூர்த்தி செய்ய ஐக்கிய நாடுகள் சபை ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியை கோரியுள்ளது.

முன்னதாக, உலக அமைப்பு சிரியர்களுக்கு 400 மில்லியன் டாலர் மேல்முறையீடு செய்தது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உயிர் பிழைத்தவர்களுக்கு உளவியல் மற்றும் மனநலச் சேவைகள் தேவைப்படும் என்று மனிதாபிமான குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

 

மேலும் படிக்க | Turkey Earthquake: அதிகரிக்கும் துருக்கி நிலநடுக்க சேதாரங்கள்! இதுவரை 15,383 பேர் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News