வாஷிங்டன்: பெய்ஜிங்குடனான பதட்டங்களை அதிகரித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (DonaldTrump), சீனாவுடனான சமூக ஊடக தளங்கள் தொடர்பான உறவுகளைப் பற்றி பெசும்போது, டிக் டாக்-கை அமெரிக்கா தடை செய்யக்கூடும் என பெரிய எச்சறிக்கையை விடுத்துள்ளார்.
"டிக் டாக்-கைப் (Tik Tok) பொருத்தவரை, நாங்கள் அதை அமெரிக்காவில் தடை செய்யப்போகிறோம்" என்று டிரம்ப் வெள்ளிக்கிழமை புளோரிடாவிலிருந்து திரும்பியபோது ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் கூறினார்.
சனிக்கிழமையன்று அமெரிக்கா, சீனாவிற்கு சொந்தமான நிறுவனத்தை தடை செய்ய அவசர பொருளாதார அதிகாரங்கள் அல்லது நிர்வாக உத்தரவைப் பயன்படுத்தக்கூடும் என்று அதிபர் கூறினார்.
இந்த செயலியின் தாய் நிறுவனமான ByteDance, மில்லியன் கணக்கான அமெரிக்க பயனர்களின் தரவுகளை தன் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறதா என்று அமெரிக்க நிர்வாகம் விசாரித்து வரும் நிலையில் டிரம்ப்பின் அச்சுறுத்தல் வந்துள்ளது. அமெரிக்க கடற்படை கடந்த ஆண்டு சேவை உறுப்பினர்களை அரசாங்க சாதனங்களிலிருந்து இந்த செயலியை நீக்குமாறு வலியுறுத்தியது.
சமூக ஊடக தளங்களில் - குறிப்பாக ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றிலிருந்து அதிபர் டிரம்ப் அதிக பயன்களை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த நிறுவனங்ககளை அவர் பல்வேறு காரணங்களுக்காக குற்றம் சாட்டியும் உள்ளார்.
அமெரிக்க, சீன உறவுகளின் மிக மோசமான தருணத்தில் இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது. ஏனெனில் அமெரிக்கா சீனா இடையில் நீண்ட காலமாக வர்த்தகப்போர் தொடர்கிறது. கொரோனா தொற்றை பரப்பியதற்காகவும் அமெரிக்கா சீனா மீது கடும் கோவத்தில் உள்ளது. ஹாங்காங்கில் ஜனநாயக சார்பு முயற்சிகளுக்கு சீனாவின் ஒடுக்குமுறையால் பதட்டங்கள் மேலும் எழுப்பப்பட்டுள்ளன. இதுவும் அமெரிக்காவின் கோவத்தை அதிகரித்துள்ளது.
பயனரிடமிருந்து சேகரிக்கப்பட்ட எந்த தரவையும் சீனாவுக்கு அனுப்பவில்லை என்று டிக்டோக் முன்பு கூறியது.
ALSO READ: அமெரிக்க காங்கிரசின் முன் சாட்சியமளிக்க வருகிறார்கள் உலகின் Top 4 CEOs: விவரம் உள்ளே!!
இந்த சமூக ஊடக செயலி ஒரு சீன நிறுவனத்திற்கு சொந்தமானது என்றாலும், அது ஒரு அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரியால் இயக்கப்படுகிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. இதுபோன்ற ஸ்மார்ட் போன் செயலிகளை பயன்படுத்தி அமெரிக்கர்களின் செல்போன்கள் வழியாக சீனா தரவுகளை எடுக்கிறதா என்பது அமெரிக்காவின் மிகப் பெரிய சந்தேகமாக உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவிலும் டிக் டாக் தடை செய்யப்பட்டால், அது சீனாவிற்கு மற்றொரு பெரிய அடியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ALSO READ: என் Tweet-களுக்காக நான் வருத்தப்படுகிறேன்: ஒப்புக்கொண்ட Donald Trump!!