நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென் மற்றும் துணைத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் டைம் பத்திரிகையின் 2020 'ஆண்டின் சிறந்த நபராக' தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த நாளிதழ் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 11) அறிவித்தது.
"அமெரிக்கவின் கதையை மாற்றியமைத்து, பிரிவினைவாதத்தை விட அன்பிற்கு தான் அதிக சக்தி என்பதை எடுத்துரைத்து, உலகில் பிரசனையை தீர்க்க கருணை அவசியம் என்பதை உணர்த்தியதற்காகவும்," டைம்ஸ் நாளிதழ் இந்த தேர்வு குறித்து விளக்க அளித்துள்ளது.
களத்தில் பணியில் உள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் அமெரிக்காவின் தொற்று நோய்கள் நிபுணர் அந்தோனி ஃபாசி, அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய மூன்று பேர் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் (Donald Trump) 232 எலக்டோரல் வாக்குகளை பெற்ற நிலையில், ஜோ பைடன் 306 எலக்டோரல் வாக்குகளை பெற்று, டிரம்பை வீழ்த்தினார்.
பிடென் (Joe Biden) தனது குடியரசுக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்பை விட, 70 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தும், ட்ரம்ப் இன்னும் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி, தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.
டைம் பத்திரிகையின் விருது 1927 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த இதழ், வருட இறுதியில், திறமையாக செயல்பட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய, செய்திகளில் அதிகம் இடம்பெற்ற நபர்களை கவுரவிக்கும் வகையில், அந்த குறிப்பிட்ட ஆண்டின் சிறந்த நபர்களை அறிவிக்கிறது.
ALSO READ | அண்ணனை மிஞ்சும் தங்கை... தென்கொரியாவை மிரட்டும் கிம் ஜாங் உன் சகோதாரி..!
டைம் இதழுக்கும் அமெரிக்க அதிபர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அமெரிக்க அதிபர் நிக்சன், ரீகன், கிளின்டன், புஷ், ஒபாமா, புஷ் ஆகியோரை டம்ஸ் நாளிதழ் சிறந்த நபர்களாக அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அதிபரும் ஒரு கட்டத்தில் ஆண்டின் சிறந்த நபராக பரிந்துரைக்கப்பட்டனர். இந்த ஆண்டு முதல் முறையாக டைம் ஒரு துணை அதிபரை ஆண்டின் சிறந்த நபராக அறிவித்துள்ளது. அமெரிக்க துணைத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் (Kamala Harris) அமெரிக்க துணைத் அதிபர் பதவியை வகிக்கும், முதல் பெண் என்பதோடு, இந்திய-ஜமைக்கா பாரம்பரியத்தின் முதல் பெண் மற்றும் நபர் என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறார்.
கடந்த ஆண்டு,சுற்றுசூழல் பாதுகாப்பு ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் இந்த பட்டத்தை வென்றிருந்தார். 1927 இல் தொடங்கிய ஒரு பாரம்பரியத்தில் பத்திரிகை இந்த கவுரவத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டைமின் பத்திரிகை அட்டையில் பிடென் மற்றும் ஹாரிஸ் ஆகியோரின் புகைப்படங்கள் "அமெரிக்காவின் கதையை மாற்றியவர்கள்" என்ற சொற்களுடன் அச்சிடப்பட்டுள்ளது.
ALSO READ | 800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டிசம்பரில் வானில் Christmas Star தெரியப் போகிறதா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR